செங்கல்பட்டு, டிச. 22- வேலை பளு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட மண்டல அதிகாரி பார்த்திபன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது துறைவாரி நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் காலம் கடந்த ஆய்வு கூட்டம், விடு முறை தின ஆய்வு கூட்டம், நேரம் கடந்த காணொளி ஆய்வு கூட்டங்களை யும், பிற துறையின் பணிகளை திணித்து வருவதாக தொடர்ந்து ஊழி யர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வரு கின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்து வந்த மண்டல துணை வட்டாட்சியர் பார்த்திபன் வேலைப்பளு,மன உளைச்சல் காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பணிச் சுமைகளை களைந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலி யுறுத்தி மாவட்டம் முழுவதும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 8 வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணி செய்திடும் 450க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலு வலர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.