சித்தாமூர், டிச. 9- செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், அகர ஊராட்சிக்குட்பட்ட கயநல்லூர் கிராம மக்களுக்கு தொடர்ந்து 100 நாள் வேலை வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கயநல்லூர் கிளை சார்பில் 100 நாள் வேலை கேட்டு சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் பூங்கொடி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சாந்தி, பவானி, ஷகிலா, சாந்தி, ஜெகதா, கன்னிகா, சௌந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர் கோரிக்கையை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்யூர் வட்ட செயலாளர் க.புருஷோத்தமன் வட்டக் குழு உறுப்பினர்கள் வெள்ளிகண்ணன் ராமமூர்த்தி கிளை செயலாளர் ஜம்புலிங்கம் உள்ளிட்ட பலர் பேசினர். போராட்டத்தை முடித்துவைத்து மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி. ஜெயந்தி பேசினார். வரும் வியாழக்கிழமை 100 நாள் வேலை கொடுக்க எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்ததின் பெயரின் போராட்டம் தற்காலிகமாக நிறைவு பெற்றது.