districts

img

100 நாள் வேலை கேட்டு மாதர் சங்கம் காத்திருக்கும் போராட்டம்

செங்கல்பட்டு, டிச.11- செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆத்தூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு கடந்த 9 மாதங்களாக நூறுநாள் வேலையை கொடுக்காமல் மாவட்ட நிர்வாகம் இருந்துள்ளது.

இத னால் கிராம மக்கள் குறிப்பாக பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட நூறுநாள் வேலையை தராமல் இருப்பது இத்திட்டத்தை நீர்த்துப்போக செய்யக்கூடிய செயலாகும். ஒன்றிய அரசு 100 நாள் வேலைக்கு கூடுதலான நிதியை ஒதுக்கீடுசெய்து வேலை உத்தரவாதத்தை உறுதி செய்ய வேண்டும் என அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திரனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம் இணைந்து காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்திற்கு மாற்றுத்திறனாளி கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர். எஸ்.தாட்சாயினி தலைமை தாங்கினார். மாதர் சங்க கிளை நிர்வாகிகளான மலர்க்கொடி, லட்சுமி, கோவிந்தம்மாள், வசந்தகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காட்டாங்குளத்தூர் பகுதி செயலாளர். ஆ.சரண்யா, செங்கல்பட்டு பகுதி தலைவர்.சி.குர்ஷித், நிர்வாகி.பொம்முத்தாய், தேவி, விதொச மாவட்டத் தலைவர். பி.சண்முகம், சிபிஎம் செங்கல்பட்டு பகுதி செயலாளர். கே.வேலன், தமு எகச முன்னாள் மாவட்டத்தலைவர்.எஸ்.கே.சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்வாக அனுமதி பெற்றவுடன் அனைத்து பணியாளர்களுக்கும் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துபூர்வமாக கொடுத்ததன் அடிப்படை யில் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. போராட்டத்தை  நிறைவு செய்து மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயந்தி பேசினார்.