districts

img

செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலர் பூங்கா

 செங்கல்பட்டு, ஆக. 11-  செங்கல்பட்டு மாவட்ட பாலர் பூங்கா அமைப்பு விழா  மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் டி.விமலா தலைமையில் சிங்கப்பெருமாள் கோவிலில் ஞாயிறன்று (ஆக. 11) சிறப்பாக  நடை பெற்றது.

எஸ்.குணசேகரன் வரவேற்றார். ரெபேக்கா, ஸ்ரீநாத், நாகவன், அஸ்வினி, கீர்த்தியாழினி, சாம்சன், கலையரசி, ரோஷினி, அபிமன்யூ, செந்தமிழ், அகிலா, கிஷோர், கீர்த்தனா, இலக்கியா, எழில், ஆசாத் உள்ளிட்ட பாலர்கள் முன்னிலை வகித்தனர்.

திருப்பூர் மாவட்ட பாலர் பூங்கா வின் நிர்வாகி வி.ராமமூர்த்தி “பாலர் பூங்காவின் நோக்கமும் கலையும்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கி னார். “மந்திரமா தந்திரமா” என்ற தலை ப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நிர்வாகி முனைவர் சேது ராமன்  சிறப்புரையாற்றினார்.

கதையும் விளையாட்டும் என்ற தலைப்பில் மதுரை மாவட்ட பாலர் பூங்காவின் நிர்வாகி வி.ரமேஷ் பேசி னார். “கனவுகள் நினைவுபட” என்ற தலைப்பில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செய லாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு  கருத்துரை வழங்கினார். ஒருங்கிணைப் பாளர்கள் எம்.செல்வம், ஐயப்பன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர் விழாவினை நிறைவு செய்து பாலர் பூங்காவின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்.அமிர்தம் பேசினார். வி.ஸ்ரீலேகா நன்றி  கூறினார். 

செங்கல்பட்டு மாவட்ட பாலர் பூங்காவின்  தலைவராக கீர்த்தி யாழினி துணைத் தலைவர்களாக அஞ்சலி, வரலட்சுமி ஆகியோரும் செயலாளராக சாம்சன் துணைச் செயலாளராக சாய்லட்சுமி, வர்ஷா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர் இவ்விழாவில் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் இருந்து நானூ றுக்கும் மேற்பட்ட குழந்தைகள்  கலந்து  கொண்டனர்.