திருப்போரூர், மார்ச் 16 – திருப்போரூர் பேரூராட்சியில் நடை பெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப் படவுள்ளது. இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ்.பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகை யில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ரூ. 42 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்டது. தற்போது திட்ட மதிப்பீடு மறுமதிப்பீடு செய்யப்பட்டு ரூ. 51.5 கோடி மதிப்பீட்டில் பணி நடைபெற்று வருகிறது. தற்போது இத்திட்டத்தில் உள்ள சில குறைபாடுகளை களைய வேண்டிய சூழல் உள்ளது. ஒம்ஆர் சாலை, பேரூராட்சி சாலை யில் பணிகளில் நடைபெறாமல் இருப்பதற்கு காரணம் சாலையின் குறுக்கே குடிநீர் வடிகால் வாரிய குழாய்கள் பதிக்க வேண்டிய பணி முடிவடையவில்லை. அடுத்த மாதம் 5ஆம் தேதிக்குள் குடிநீர் வடிகால் வாரிய பணிகள் முடிக்கப்பட்டு நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைப்பதாக உறுதியளித்துள்ளனர். இந்த பணிகள் இரவு நேரத்தில் நடைபெற உள்ளதால் போக்குவரத்தில் மாற்றம் செய்ய ப்படவுள்ளது. 16ம் தேதியிலிருந்து 24ம் தேதி வரை இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை சென்னையிலிருந்து வரும் வாகனங்கள் இல்லலூர் சாலை வழியாக கிரிவலப்பாதை சந்திப்பில் செங்கல்பட்டு சாலையில செல்லவேண்டும். இதேபோன்ற ஏப்ரல் மாமல்லபுரத்தில் இருந்து வரும் வாகனங்கள் 1 முதல் 6ம் தேதி வரை வரை சான்றோர் வீதி வழியாக தெற்கு மாட வீதி சாலை வழியாக செல்லவேண்டும் என்றார். பேட்டியின் போது திருப்போரூர் பேரூ ராட்சி தலைவர் தேவராஜ் மற்றும் நெடுஞ் சாலைத் துறை அலுவலர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் பேரூராட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.