செங்கல்பட்டு, ஆக. 28 - பெண்கள் பணிபுரியும் இடங்களில் புகார் பெட்டி அமைக்க வேண்டுமென உழைக்கும் பெண்களின் ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தி உள்ளது. ஒருங்கிணைப்புக் குழுவின் செங்கல்பட்டு மாவட்ட முதல் மாநாடு சனிக் கிழமையன்று (ஆக.27) செங்கல்பட்டில் நடை பெற்றது. இந்த மாநாட்டில், கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 50 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். முறை சாரா தொழிலாளர்கள் பணி செய்யும் இடங்களில் குழந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி, கால முறை ஊதியம் வழங்க வேண்டும். பெண் தொழி லாளிகளுக்கு இலவசமாகத் தையல் எந்திரம் வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன மாநாட்டிற்கு மின் அரங்க மாநில செயற்குழு உறுப்பினர் மனோ மங்கை யற்கரசி தலைமை தாங்கி னார். சிஐடியு கொடியை கஜலட்சுமி (அங்கன்வாடி) ஏற்றினார். அஞ்சலி தீர்மா னத்தை மீனா (முறைசாரா) வாசித்தார். புஷ்பலதா (தையல்) வரவேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து சிஐடியு மாவட்ட செய லாளர் கே பகத்சிங் தாஸ் பேசினார். அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.கலைச்செல்வி வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாநாட்டை வாழ்த்தி சிஐ டியு மாவட்டத் தலைவர் கே.சேஷாத்ரி மற்றும் ராஜேஸ்வரி (அங்கன்வாடி), நாகலட்சுமி (மின்னரங்கம்), கற்பகம் (உள்ளாட்சி ஊழி யர்) உள்ளிட்டோர் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.தனலட்சுமி பேசினார். அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக கலைச்செல்வி தேர்வு செய்யப்பட்டார்.