செங்கல்பட்டு, நவ. 4- செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்துள்ள கன்னிவாக்கம், சங்கமித்ரா நகர் அருகே, விவசாய நிலத் தில் இருந்த ஒரு மின்கம் பத்தில் மின்கம்பி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தாழ்வாக தொங்கியவாறு இருந்துள்ளது. பலமுறை இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் மின் துறை அலுவலர்க ளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்த நிலையில் வெள்ளியன்று ( நவ.4) காயரம்பேடு மூலக்கழனி பகுதியை சேர்ந்த, 3 எருமை மாடு மற்றும் 1 கன்று அப்பகுதியில் மேய்ந்தது. இதில் ஒரு எருமை மாடு கர்ப்பமாக இருந்துள்ளது. தாழ்வாக சென்ற மின்சார கம்பி அறுந்து விழுந்து சம்பவ இடத்தி லேயே நான்கு மாடுகளும் உயிரிழந்தன. பலமுறை தகவல் தெரிவித்தும் நட வடிக்கை எடுக்காத, மின்வாரிய அதிகாரிகள் தான் இந்த சம்பவத்திற்கு காரணம் என மக்கள் குற்றச் சாட்டியுள்ளனர். உயிரி ழந்த மாடுகளின் உரி மையாளருக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.