செங்கல்பட்டு, ஆக.6- செங்கல்பட்டு மாவட்டம், மண்ணி வாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி (35). திருமணமான இவர், தனிப்பட்ட முறையில் மாண வர்கள் மற்றும் தனியார் வெளிநாட்டு கம்பெனிகளில் பணியாற்றுபவர்களுக்கு ஜப்பான் மொழி பெயர்ப்பாளராக இருந்து வருகிறார். இவர், பல்வேறு போராட்டங் களுக்கு மத்தியில் தீவிர முயற்சிக்கு பிறகு முதன்முதலாக ஆசிய கண்டத்தில் உள்ள பனி மலையில் ஏறி உச்சத்தைத் தொட்டார். இரண்டாவதாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள மவுண்ட் எல்ப்ரஸ், மூன்றாவதாக ஆப்பிரிக்கா கண்டம் மெளன்ட் கிளிமஞ்சா ரோ மலையில் ஏறினார். அதனை தொட ர்ந்து நான்காவதாக தென் ஆப்பிரிக்கா கண்டம் மவுண்ட் அகன்ககோவா மலை, ஐந்தாவதாக ஆஸ்திரேலியா கண்டம் மவுண்ட் கெசியஸ்கோ மலை என ஐந்து கண்டங்களில் உள்ள பனி சிகரத்தின் உச்சத்தை தொட்டுள்ளார். இந்த சூழலில் 6-ஆவதாக நவம்பர் மாத இறுதியில் மீண் டும் முத்தமிழ்ச்செல்வி அண்டார்ட்டிகா கண்டத்தில் உள்ள சிகரத்தை தொடவுள்ளார்.
அவருக்கு உதவிடும் வகையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ. 2 லட்சத்திற்கான காசோலையை வழங்கியிருந்தார். தற் போது செங்கல்பட்டு திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனனும் ரூ.1 லட்சத்திற் கான காசோலையை வழங்கியுள்ளார்.
கள்ளச்சாராயம்: பலி 68 ஆனது
கள்ளக்குறிச்சி, ஆக. 6 - கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷ சமுத்திரம், மாதவச்சேரி ஆகிய பகுதி களில் கடந்த ஜூன் 19 அன்று கள்ளச்சா ராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப் பட்டனர். இதில் 67 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். 161 பேர் குண மடைந்து வீடு திரும்பினர். கருணா புரத்தை சேர்ந்த மோகன் (50) மட்டும் புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் கள்ளச் சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்தது. கள்ளச் சாராய வழக்கு தொடர்பாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்து 24 பேரை கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டாள் கோவில்தேர்த் திருவிழா
சாதி ரீதியிலான அடையாளங்களுக்கு உயர்நீதிமன்றம் தடை
மதுரை, ஆக. 6 - விருதுநகர் மாவட்டம் திருவில்லி புத்தூரைச் சேர்ந்த சந்தனகுமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அதில், “திருவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் கோவிலின் ஆடி உற்சவ திருவிழா மற்றும் தேர் திருவிழா இன்று (ஆகஸ்ட் 7) நடைபெற உள்ளது.
இந்த விழாவில் சீர்பாதம், எம்புதடி போடுதல், எண்ணெய் கொடுத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். இதில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அந்த சமூ கத்தின் அரசியல் தலைவர் படம் அச்சிடப் பட்ட டி-ஷர்ட்களை அணிந்து கொண்டு எம்புதடி நிகழ்வை கடந்த சில ஆண்டு களாக செய்து வருகின்றனர்.
அத்தோடு தலையில் குறிப்பிட்ட வண்ண ரிப்பன்களை கட்டிக்கொண்டும், துண்டு அணிந்து கொண்டும், கொடிகளை கையில் வைத்துக் கொண்டு, சாதிய அரசியல் தலைவர்களுக்கு சாதகமாக முழக்கங்களை எழுப்பிக் கொண்டும் தேர் திருவிழாவில் பங்கேற்கின்றனர். இது எந்த வகையிலும் கோவில் திருவிழா வோடு தொடர்புடையது அல்ல.
ஆகவே, ஆடி உற்சவ திருவிழாவின் கடைசி நாளன்று சாதிய தலைவர்களின் உருவப்படம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் களை அணியவும், சாதி அடையாளம் கொண்ட ரிப்பன்கள், துண்டு கொடிகள் ஆகியவற்றை பயன்படுத்தவும் தடை விதிப்பதோடு, குறிப்பிட்ட சமுதாயத்திற்கு சார்பாக முழக்கங்களை எழுப்பவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணி யன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “இது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன” என அரசுத் தரப்பில் தெரி விக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், “அமைதிப் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மா னங்களின் அடிப்படையில், ஒற்றுமையாக இணைந்து திருவிழாவை நடத்த வேண்டும். சாதிய அடையாள டி-ஷர்ட்டு கள் அணிவது, கொடி பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. சாதிய அடையாளமின்றி தேர்திருவிழா நடப்ப தை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.