செங்கல்பட்டு, ஆக. 23 - தலித் கிறிஸ்தவர்களையும் பட்டியல் சாதியினராக அறிவிக்க வேண்டும் என்று தலித் கிறிஸ்தவர் தமிழ்நாடு மாநில வாழ்வுரிமை சிறப்பு மாநாடு வலியுறுத்தியுள்ளது
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில், தலித் கிறிஸ்தவர் தமிழ்நாடு மாநில வாழ்வுரிமை சிறப்பு மாநாடு, செங்கல் பட்டில் வெள்ளியன்று (ஆக.23) நடை பெற்றது. இதில் மேற்கண்ட கோரிக்கை யை வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டு உள்ளது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணைப்பொதுச்செயலாளர் க. சுவாமி நாதன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே. பாலபாரதி சிறப்புரையாற்றினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ்
தீர்மானங்களை விளக்கிப்பேசினார்.
புரட்சியாளர் அம்பேத்கர் நூற்றாண்டு இயக்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் எல். யேசுமரியான், அருட்தந்தை எல். தாஸ், சி.எஸ்.ஐ. சென்னை பேராயம் செயலர் அருட்பணி எஸ். அகஸ்டின் பிரேம்ராஜ், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலச் செயலாளர் எம். ராமகிருஷ்ணன், மாவட்ட ஆலோ சகர் ஆர். ஜான் நிக்கோலஸ், செங்கை மறை மாவட்ட எஸ்.சி.-எஸ்.டி. பணிக்குழு இ. அந்தோணிராஜ், இசிஐ ஏ.ஆஸ்டின் டேனியல், தலித் கிறிஸ்தவர் இயக்க மறை மாவட்டத் தலைவர் என்.ஏ. செல்வராஜ், செங்கை தூய அந்திரேய ஆலய ஆயர் ஆலன் லிவிங்ஸ்டன், வழக்கறிஞர் சி. ஸ்டீபன் குமார், பாஸ்டர் ஜோயல் கே. சேகரன், காலேப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ரெவ் அங்கை யன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் த. செல்லக் கண்ணு, சிறப்புத் தலைவர் எஸ்.கே. மகேந்திரன், பொருளாளர் இ. மோகனா, துணைப் பொதுச்செய லாளர்கள் செல்வன், பி. சுகந்தி, மாவட்டத் தலைவர் இ. சங்கர் ஆகியோர் பங்கேற்று பேசினர். மாவட்டச் செயலாளர் ஜி.புருஷோத்தமன் நன்றி கூறினார்.
இந்த மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
“1950-இல் பட்டியல் சாதி யினருக்கான வரையறை தீர்மானிக்கப்பட்ட போது இந்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே அதில் இடம் தரப் பட்டது. ஆனால் மதம் மாறிய தலித்துகளுக்கும் சாதிய ஒடுக்கு முறைகள் மிகக் கடுமையான முறையில் தொடர்வதால் அவர் களையும் பட்டியல் சாதிகளில் இணைக்க வேண்டும் என்று கோரி க்கை எழுந்தது. 1956-இல் சீக்கிய மதத் தலித் மக்களும், 1990-இல் பவுத்த மதத்தைச் சார்ந்த தலித் மக்களும் பட்டியல் சாதியினராக அறிவிக்கப்பட்டனர். ஆனால் தலித் கிறித்தவர்களுக்கும், இஸ்லா மியர்களுக்கும் சாதிய ஒடுக்கு முறைகள் தொடர்ந்தாலும் பட்டியல் சாதியினராக தாங்கள் இணைக்கப் பட வேண்டும் என்று அவர்கள் முன்வைத்து வரும் கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வரு கிறது. 2000-ஆம் ஆண்டிற்கு பிறகு அரசால் அமைக்கப்பட்ட சச்சார் குழு, ரங்கநாத் மிஸ்ரா குழு ஆகியன சிறுபான்மை மதங்களுக்கு மாறிய தலித்துகளும் பட்டியல் சாதியினராக அறிவிக்கப்பட வேண்டும் என்று உரிய தரவுகளோடு பரிந்துரைத்தும் அக்கோரிக்கை இன்று வரை ஈடேறவில்லை.
தொடரும் தீண்டாமை
மதம் மாறிய பின்னரும் தலித் மக்கள் சாதிய ஒடுக்கு முறை களை வாழ்வின் எல்லா அம்சங்களி லும் எதிர்கொண்டாலும் வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நிவாரணங்களை பெறுவதோ, நீதி யை கோருவதோ சாத்தியமாக வில்லை. பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீடும் கிடைக்கவில்லை. இதனால் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில்கள் ஆகியவற்றிலும் தலித் கிறிஸ்தவர்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர்.
நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் குழு
உச்ச நீதிமன்றத்தில் 20 ஆண்டு களாக இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருந்த சூழலில் சச்சார் குழு, ரங்கநாத் மிஸ்ரா குழு ஆகியவற்றின் தரவுகள் கருத்தில் கொள்ளப்படும் என்கிற நிலைமை உருவான பின்புலத்தில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் இன்னொரு குழு 2022-ஆம் ஆண்டு அமைக்கப் பட்டது. ஏற்கெனவே தரவுகள் நிறைய இருந்தும் புதிய குழு அமைக்கப் பட்டிருப்பது வலுவான சந்தேகங் களை எழுப்பி இருக்கின்றன. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 அன்று தலித் கிறிஸ்த வர்கள் கறுப்பு நாளாக அனுசரித்து இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இக்கோரிக்கை தொடர்பாகவும், தலித் கிறிஸ்தவர் கள் எதிர்கொள்ளும் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகவும் குரல் எழுப்பியும் தொடர்ந்து போராடியும் வருகிறது. எனவே சிறுபான்மை மதங்களுக்கு மாறிய தலித்துகளும் பட்டியல் சாதியின ராக அறிவிக்கப்பட வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்துகிறது”. இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பட்டியல் சாதியின ருக்கான இட ஒதுக்கீட்டு சதவிகி தத்தை அதிகரிக்க வேண்டும், தலித் கிறிஸ்தவர் வாழ்நிலை மேம்பாட்டிற்கான திட்டங்களை அமல்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்களும் இம்மாநாட்டில் நிறைவேற்றப் பட்டன.