districts

img

கல்பாக்கம் அணுசக்தி துறையில் ஒப்பந்த முறை: ரத்து செய்ய சிஐடியு மாநாடு வலியுறுத்தல்

செங்கல்பட்டு, அக். 17- கல்பாக்கம் அணுசக்தி துறை நிறுவனங்களில் நிரந்தர பணிகளில் ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்ய வேண்டும் என சிஐடியு செங்கல்பட்டு மாவட்ட மாநாடு  வலியுறுத்தியுள்ளது. சிஐடியு செங்கல்பட்டு மாவட்ட 12வது மாநாடு ஞாயிறன்று (அக் 16) தோழர் முனிவேல் அரங்கம்,  சிங்கப்பெருமாள் கோயிலில் மாவட்டத் தலைவர் கே.சேஷாத்திரி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் டி.பாபு வரவேற்றார். சங்கத்தின் கொடியை மாநிலக்குழு உறுப்பி னர் கே.பழனிவேல் ஏற்றினார். உழைக்கும் பெண்கள் ஒருங் கிணைப்பு குழு அமைப்பாளர் கே.கலைச்செல்வி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமார் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் கே.பகத்சிங் தாஸ் வேலை அறிக்கையையும், மாவட்டப் பொருளாளர் என்.பால் ராஜ் வரவு- செலவு அறிக்கையை யும் சமர்பித்தனர்.  சிஐடியு மாநில துணைப் பொதுச்  செயலாளர் எஸ்.கண்ணன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.வாசுதேவன், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பி.சண்முகம் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். மாவட்ட துணைச் செயலாளர் எம்.வெங்கடேசன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
கல்பாக்கம் அணுசக்தி துறையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்திட வேண்டும், அனைத்து துறைகளிலும் பணியாற்றும் ஒப்பந்த  தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.  பணி ஓய்வு பெறும் தொழிலா ளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், செங்கல்பட்டில் ஒன்றிய அரசால்  கட்டப்பட்டு கிடப்பில் போடப்பட் டுள்ள உயிர்காக்கும் தடுப்பூசி தயாரிக்கும் எச்பிஎல் தொழிற் சாலைக்கு போதிய நிதி ஒதுக்கி உடனடியாக உற்பத்தியை துவக்க வேண்டும். கட்டுமானம், முறைசாரா தொழிலாளர்களுக்கு விபத்து உதவி தொகை ரூபாய் 5 லட்சமாக  உயர்த்த வேண்டும், மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்,  கல்பாக்கம் அணுசக்தி நிலை யத்தை சுற்றியுள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க  வேண்டும், தற்காலிக தன்மை யுள்ள பணிகளில் ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு சட்டப்படியான உரிமைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
புதிய நிர்வாகிகள்
44 பேர் கொண்ட மாவட்டக் குழுவிற்கு தலைவராக கே.சேஷாத் திரி, செயலாளராக க.பகத்சிங் தாஸ்,  பொருளாளராக என்.பால்ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.