சென்னை:
விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைக்க உதவிடும் வகையிலும் ஒன்றிய அரசின் சூழ்ச்சி திட்டத்திற்குஉடந்தையாகிய அதிமுக அரசு கொண்டு வந்தஒப்பந்த பண்ணையச் சட்டத்தை அடியோடு ரத்துச் செய்ய சட்டப்பேரவையில் சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்த சாகுபடி முறைக்கென கொண்டுவரப்பட்ட தனிச் சட்டத்தை அறவே நீக்குவதற்கான சட்ட மசோதா பேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தாக்கல் செய்தார். மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக உறுப்பினர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.மசோதாவில் கூறப்பட்டிருப்பதாவது:-
வேளாண் விளை பொருள்கள், கால்நடைமற்றும் அதன் உற்பத்தியை ஒப்பந்தப் பண்ணை மூலமாக அளிக்க கடந்த 2019 ஆம் ஆண்டுதனிச் சட்டம் இயற்றப்பட்டது. தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடைஒப்பந்தப் பண்ணைத் தொழில் மற்றும் சேவைகள் சட்டம் என்பதே அதன் பெயராகும். 2019 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டமானது, இதுவரையில் நடைமுறைக்கு வரவில்லை. ஒப்பந்தப் பண்ணை என்பது உழவர் மற்றும் கொள்முதல் செய்பவருக்கு இடையே விலை, அளவு, தரம் மற்றும் காலம்தொடர்பாக உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதாகும்.இந்தச் சட்டத்துக்கு முன்பாக, ஏற்கெனவே 1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்துதல் சட்டம் அமலில் உள்ளது. இது மாநிலத்திலுள்ள வேளாண் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வாங்குவதும், விற்பனை செய்வதையும் ஒழுங்கு முறைப்படுத்த வழி செய்கிறது. இந்தச் சட்டத்தின் மூலமாக வேளாண் சந்தைப்படுத்துதல் அமைப்பானது உழவர்களுக்கு அதிக விலை மதிப்பீட்டுக்கு வழிஏற்படுத்துகிறது. எனவே, சந்தைப்படுத்தும் அம்சத்துக்காக தனியே ஒரு சட்டம் இயற்றுவதற்குப் பதிலாக, ஏற்கெனவே உள்ள 1989-ஆம் ஆண்டைய சட்டத்தை வலுகூட்டுவது உகந்தது என கருதப்படுகிறது. எனவே, 2019-ஆம்ஆண்டைய வேளாண் விளை பொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணை மற்றும்சேவைகள் சட்டத்தை அறவே நீக்கம் செய்யமுடிவு செய்துள்ளது என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-19-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், விவசாய உற்பத்தியைப் பெருக்கவும், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை ஊக்குவிக்கவும் ஒப்பந்த அடிப்படையிலான உற்பத்தி முறைக்கு உரியசட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த அறிவிப்பின்படி, ஒப்பந்தப் பண்ணையச் சட்டத்துக்கான மசோதா, கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதியன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு 2019-ஆம் ஆண்டு அக்டோபரில் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்தார். இந்தச் சட்டத்தைவிரைவில் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான சட்ட விதிகளை உடனடியாகவகுத்து சட்டத்தினை முழுச் செயலாக்கத் துக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப் படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், தமிழக அரசு, ஒன்றிய அரசு அல்லது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தால் தடை செய்யப்பட்ட எந்தவொரு விளை பொருள்களையும் புதிய சட்டத்தின் மூலமாக ஒப்பந்தங்களைச் செய்து விற்பனைசெய்ய முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது.அதிமுக அரசு கொண்டு வந்த ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டம் விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைக்கவே தனிச்சட்டம் உதவிடும். அதுமட்டுமல்லாமல் ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டம் என்பது ஒன் றிய அரசின் சூழ்ச்சி திட்டம். இதற்கு தமிழகஅரசு பலியாகிவிட்டது. இந்த சட்டத்தால் பெருநிறுவனங்களின் கைகளுக்கு விவசாய நிலங்கள் செல்லவே வழி வகுக்கும்” என்றும்விவசாயிகளும் விவசாய சங்கத் தலைவர் களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மேலும், விவசாயிகளின் கருத்துகளைக் கேட்காமல் இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஓப்புதல் வழங்கியிருப்பது வேதனைக்குரியது. அதுமட்டுமின்றி இதனால், விவசாயிகள் பெரு நிறுவனங்கள் தரும் விதைகளை மட்டுமே சாகுபடி செய்ய நேரிடும். பாரம்பரியவிவசாயி முறைக்கும், விதைகளுக்கும் புதியசட்டத்தால் ஆபத்து நேரிடும்” என்றும் எச்சரித்திருந்தனர். இந்த நிலையில், சட்டத்தை நீக்குவதற்கான மசோதாவை பேரவையில் சனிக்கிழமைதிமுக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை அறிமுக நிலையிலேயே அதிமுக எதிர்த்தது. கட்சியின் உறுப்பினர் கே.பி.அன்பழகன், அதனை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாகக் கூறினார். கூட்டத் தொடர் முடிவதற்குள்ளாக, மசோதாகுரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப் படும்.