செங்கல்பட்டு, ஜூலை 31- வங்கிக் கடனை நிறுத்தி வைத் துள்ள ஒன்றிய அரசை கண் டித்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு சாலையோர வியா பாரிகள் சங்கத்தின் மாநில ஒருங் கிணைப்பு குழு கூட்டம் புதனன்று (ஜூலை 31) செங்கல்பட்டில் எஸ்.சந்தியாகு தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் ஆர்.தெய்வராஜ், சாலையோர வியாபாரிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பி.கருப்பையன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகு மாறன் நிறைவுரையாற்றினார்.
இதில், சாலையோர வியாபாரிகளை சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்திற்கு விரோதமாக அப்புறப்படுத்துவத்தை கைவிட வேண்டும். சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் இலவச தள்ளுவண்டி வழங்கவேண்டும். பிஎம் ஸ்வாநிதியில் இருந்து ரூ.10000, 20000, 50000 வழங்கி வந்தனர். தற்போது கடன் தவணை தொகை கட்டி முடித்தவர்களுக்கும், புதிதாக கடன் தொகைகேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் கடன் வழங்க மறுத்து வருகிறார்கள். எனவே ஏற்கனவே வழங்கியது போல் விண்ணப்பித்த அனைவருக்கும் கடன் தொகையை வழங்கிடவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த தீர்மானங்களை வலியுறுத்தி ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.