செங்கல்பட்டு,ஆக. 16- செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில் சர்வதேச காத்தாடி திருவிழா நான்கு நாட்கள் நடை பெறுகின்றது.
திருவிடந்தை கடற்கரை பகுதியில் மூன்றாம் ஆண்டாக நடைபெறும் காற்றாடி திருவிழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி துவங்கியது. ஆகஸ்ட் 18 ஆம் தேதி நிறைவுபெறுகிறது. காத்தாடி திருவிழாவை காண சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வருகை தந்துள்ளனர். தாய் லாந்து, வியட்நாம், பிரான்ஸ், ஸ்விட்சர் லாந்து, ஜெர்மனி, மலேசியா இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து ராட்சத காத்தாடி விடு பவர்கள் வருகை தந்துள்ளனர்.
கடந்த ஆண்டு 20-க்கும் அதிகமானோர் வருகை தந்து 150 காத்தாடிகளை பறக்கவிட்ட நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 40-க்கும் அதிகமானோர் வருகை தந்து 300 காத்தாடிகளை பறக்கவிட்டுள்ளனர்.
சுதந்திரதினத்தன்று (ஆக.15) காத்தாடி திருவிழாவை மாநில சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், குறு சிறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பர சன் கலந்துக்கொண்டு துவக்கி வைத்தனர்.
முதல் ஆண்டு காத்தாடி திரு விழாவை பார்வையிட 10 ஆயிரம் பேர் வருகை தந்தனர். இரண்டாம் ஆண்டில் 20 ஆயிரம் பேர் வருகை தந்ததாக வும் இந்த ஆண்டு 50 ஆயிரம் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
மேலும் சர்வ தேச காத்தாடி திருவிழா வில் தமிழகம் மட்டும் இல்லாமல் வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணி கள் வருகை தந்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த வண்ணமிகு திருவிழாவில் பல விலங்கு கள், தேசிய கொடி, காளை மாடு, திமிங்க லம், கரடி, சேவல், கழுகு, சுறா மீன், பாம்பு, உளளிட்ட உருவத்தில் ராட்சத காத்தாடிகள் பறக்கவிடப்படுகிறது.
நான்கு நாட்களும் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே காத்தாடிகள் பறக்கவிடப்படும் 12 வயதுக்கு குறைவான சிறுவர்கள் இந்த விழாவில் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள். 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 200 ரூபாய் கட்டணம் வசூலிப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.