districts

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நிரந்தர பணிகளை உருவாக்குக சிஐடியு ஆர்ப்பாட்டத்திற்கு விசிக ஆதரவு

செங்கல்பட்டு, ஏப். 4- கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நிரந்தர பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 5ம்  தேதி நடைபெறும் சிஐடியு ஆர்ப்பாட்டத் திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி முழு ஆதரவு தருவதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அணுமின் நிலையத்தில் சட்டவிரோதமாக செய்யப்பட்டு வரும் வேலை நீக்கங்களை ரத்துசெய்ய வேண் டும்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு சம்பளத்து டன் மீண்டும் வேலை வழங்க வேண்டும்,   சுற்றுப்புற கிராம சபைகளில் நிறைவேற்றி யுள்ள தீர்மானங்கள் படி  நிரந்தர வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்,  உடனடி தீர்வாக நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் உள்ளது போன்று கிங்காஸ் தொழில் கூட்டுறவு சேவை சங்கத்தை விரிவுபடுத்த வேண்டும்,சுற்றுப்புற கிராம மக்களின் மேம்பாட்டிற்கு பள்ளி, கல்லூரி,  மருத்துவ வசதியை ஏற்படுத்தவேண்டும்,  பழிவாங்குதல் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்,  உரிமைகளை உத்தரவாதப் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் வருகின்ற ஏப்ரல் 5ம் தேதியன்று  கல்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு  தொழிற்சங்கங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் அம்பேத் கர் நகர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட விசிக தலைவர் தொல்.திருமாவளவன்  செய்தியாளர்களிடம் பேசு கையில், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில்  சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாக தெரியவருகின்றது. இந்த  கோரிக்கை மட்டுமின்றி பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில்   நடைபெறும்  ஆர்ப்பாட்டத்திற்கு விடு தலை சிறுத்தைகள் கட்சி முழு ஆதரவு வழங்கும் என்றார்.