அரியலூர், ஜூன் 22- கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள், பணியாளர்கள் நல வாரி யத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்க லாம் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஜா. ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவால யங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப் பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள், தொழு நோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் ஆகியோரின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற் காக, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரி யும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்க அரசு ஆணையிட்டு உள்ளது.
இந்நல வாரியத்தில் உறுப்பினராக சேரு வதற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையி னர் நல அலுவலகம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ரோமன் கத்தோலிக்க திருச்சபை, அதன் பேரா யர்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபை ஆயர்கள், சினாட் ஆஃப் பெண்டகோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் பெற்ற திருச்சபைகளிட மிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்காணும் திருச்சபைகளின் பரிந்துரை யின் அடிப்படையில், மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவல ரால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
இந்த வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பி னர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை யின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப் படும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலு வலகத்தை தொடர்பு கொண்டு நல வாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து பயன்பெறலாம்.