அரியலூர், டிச.2 - சிறையில் அடைக்க அழைத்துச் சென்ற போது தப்பி ஓடிய கைதியை 15 நிமிடத்தில் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இடையக்குறிச்சியைச் சேர்ந்தவர் பாலாஜி (23). இவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு, போக்சோ சட்டத்தில் கடந்த நவ.26 அன்று ஜெயங்கொண் டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் திங்களன்று பாலாஜிக்கு ஆண்மை தன்மை பரிசோதனை செய்வதற் காக சிறை காவலர்கள் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை முடிந்த வுடன் மீண்டும் கைதி பாலாஜியை ஜெயங் கொண்டம் கிளைச் சிறையில் அடைக்க காவ லர்கள் சிறைக்கு உள்ளே அழைத்துச் சென்ற னர்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் காவலர்களை தள்ளிவிட்டு, கைதி பாலாஜி தப்பி ஓடினார். அதிர்ச்சியடைந்த சிறை காவலர்கள் உடனடியாக பாலாஜியை கைது செய்ய தங்களது தேடுதலை தொடங்கினர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் வெள்ளாளத் தெருவில் கைதி சென்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்ற சிறை காவலர்கள் கைதி பாலாஜியை 15 நிமி டத்தில் மடக்கிப் பிடித்து மீண்டும் ஜெயங்கொண் டம் கிளைச் சிறையில் அடைத்தனர்.