அரியலூர், ஏப்.19- பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்திட கோரியும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும், ஒன்றிய அரசை கண்டித்தும் அரியலூர் அண்ணா சிலை அருகில் சிஐடியு மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் சந்தானம் ஆகியோர் உரையாற்றினர். இதில், முருகன், அரியலூர் டாடா ஏசி ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் வேன் கார் ஓட்டுநர் சங்க பன்னீர்செல்வம், சௌந்தராஜன், கைகாட்டி ஆட்டோ சங்கம் பார்த்திபன், இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.