அரியலூர், டிச.24 -
தந்தை பெரியாரின் 51 ஆவது நினைவு தினத்தையொட்டி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள தந்தை பெரியாரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் பி.துரை சாமி, ஒன்றியச் செயலாளர் அருண்பாண்டி யன், மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.மலர்கொடி, தனலட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினர் சந்தானம், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஜெயங்கொண்டத்தில் உள்ள பெரியார் உருவச் சிலைக்கு இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் குணா தலைமையில் பிரகதீஷ்வரன், விக்னேஷ், பூமிநாதன், ஆண்டனி ஹரிஹரன் உள்ளிட்ட மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருவாரூர்
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் உருவச் சிலைக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் திருவாரூர் கிளை சார்பாக மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் எம்.செளந்தரராஜன், மேனாள் மாவட்டச் செய லாளர் பகவன்ராஜ், கிளைத் தலைவர் மகா லிங்கம், பொருளாளர் அசோக்ராஜ் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.