அரியலூர், ஜூன் 18- தேசிய அளவில் நடைபெற்ற கிக் பாக்ஸிங் போட்டியில், ஆண்டிமடம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 6 தங்கப் பதக்கம், 2 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ள னர். வெற்றி பதக்கங்களோடு திரும்பிய மாணவர்களுக்கு ஊர் மக்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத் தில், அரியலூர் மாவட்ட கிக் பாக்ஸிங் சார்பில் மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வரு கின்றன.
கடந்த மாதம் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சுபாஷினி, எழில், அக்ஷயா, நந்தினி, தினேஷ், நவீன்குமார், பாத்திமா, ஆதிரசஹானா, முகுந்தன் ஆகிய 9 மாணவர்களும் வெற்றி பெற்று மேற்குவங்க மாநிலம் சிலிகுரி நகரில் நடைபெற்ற தேசிய அளவி லான போட்டிகளில் பங்கேற்றனர்.
‘வீடு’ தொண்டு நிறுவனம், ‘வீடு’ செல்வம் கிளினிக், எங்கள் மற்றும் மக ளிர் அறக்கட்டளை நிர்வாகி டாக்டர் பரமேஸ்வரி, ஆனந்தராஜ், சந்திரா மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர் கள் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரி வித்தனர்.
பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற கிக் பாக்ஸிங் போட்டிகளில், சுபாஷினி, எழில் ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வென்றனர். அது போல் அக்ஷயா, நந்தினி, தினேஷ், நவீன் குமார் ஆகியோர் வெவ்வேறு பிரிவு களில் தங்கப் பதக்கங்கள் வென்றனர். மாணவர்கள் ஆதிரசஹானா, முகுந்தன் ஆகியோர் வெவ்வேறு பிரிவுகளில் வெண்கலப் பதக்கங்கள் வென்றனர்.
வெற்றி பதக்கங்களோடு ஊர் திரும்பிய மாணவர்களுக்கு, ஆண்டி மடம் பேருந்து நிலையத்தில் ஊர் மக்கள், பெற்றோர்கள் மற்றும் ஆண்டி மடம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது.
அரசுப் பேருந்து நிலையத்தி லிருந்து, ஆண்டிமடம் அரசு மேல் நிலைப்பள்ளி வரை வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். பின்பு, பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் வெற்றி பெற்ற அனைவரையும் வாழ்த்தி உரை யாற்றினர்.
வெற்றி பதக்கங்களைப் பெற்ற 9 மாணவர்களில் நான்கு மாணவர்கள் அரசுப் பள்ளியிலும், ஐந்து மாண வர்கள் தனியார் பள்ளியிலும் கல்வி கற்று வருகின்றனர்.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாண வர்கள் தேசிய அளவில் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளது, அப் பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.