districts

போராட்ட அறிவிப்பு எதிரொலி ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகள் “தீக்குளிப்பு நாடகம் முறியடிப்பு”

அரியலூர், மார்ச், 15- அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர்  தனது வய லுக்கு அருகில் உள்ள வண்டிப்பாதை யை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தார். இதனால் விவசாய இடுப்பொ ருட்களை  எடுத்துச் செல்வதற்கும் விவ சாய வேலைக்கு செல்லவும் விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட னர் வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பல்வேறு போராட் டங்கள் நடைபெற்றன.  இந்த நிலையில் வண்டிப்பாதை ஆக்கிரமிப்பு இடத்தை மீட்கும் நடவ டிக்கையின் ஒரு பகுதியாக வருவாய் துறை, காவல்துறை உதவியுடன் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. வண்டிப்பாதை இடத்தை அளவீடு செய்யும் பணி நடைபெற்ற போது ஆக்கி ரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்த விவசாயி ஜெயவேல் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்  பாதுகாப்புப் பணியில் ஈடு பட்டிருந்த காவல்துறையினர், பொது மக்கள் ஜெயவேலை மீட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.  இதற்கிடையில் வண்டிப் பாதை ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கிராம மக்கள் செவ்வாயன்று தனி நபர் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி  ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த இருந்த  நிலையில் ஆக்கிரமிப்பை அகற்றினர்.