அரியலூர், ஜூலை 6 - பத்திரப் பதிவு செய்வ தற்கு ரூ.1,500 லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேலக் குடியிருப்பு திரவுபதி அம்மன் கோவில் பின்புறம் குமரன் நகரில் பத்திரப் பதிவு அலுவலகம் செயல் பட்டு வருகிறது. இங்கு சார் பதிவாளராக சேலம் மாவட்டம், சிறுவாச்சூர் கிரா மத்தைச் சேர்ந்த பிரகாஷ் (32) பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஜெயங் கொண்டத்தில் தபால்கார ராக பணியாற்றும் கரடி குளம் கிராமம் சோழியன் தெருவைச் சேர்ந்த சாக்ர டீஸ் (54) என்பவருக்கு, அவ ரது மகன் பெர்னாட்ஷா என்பவர், தனது பெயரில் உள்ள நிலத்தை தான செட்டில் மெண்ட் எழுதி கொடுத் துள்ளார். இது தொடர்பாக புத னன்று பத்திரப் பதிவுக்காக, அவர்கள் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று சார் பதிவாளரை அணுகினர்.
அப்போது சார் பதிவாளர் பிரகாஷ், பத்திரப்பதிவு செய்ய லஞ்சமாக ரூ.1,500 கேட்டதாகவும், அதனை அலுவலக உதவியாளராக உள்ள தற்காலிக பணியா ளரான விக்கிரமங்கலம் அருகே உள்ள கடம்பூர் தெற்கு தெருவைச் சேர்ந்த சிவசக்திவேலிடம் (28) கொடுக்கும்படி தெரிவித்த தாகவும் கூறப்படுகிறது.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சாக்ரடீஸ், இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் செய்தார். பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுரையின்படி, வியாழ னன்று சாக்ரடீஸ் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு சென்று, அங்கிருந்த அலுவ லக உதவியாளர் சிவசக்தி வேலிடம் ரூ.1,500-ஐ கொடுத் தார். அதனை அவர் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தி னர்.
பல மணி நேர விசார ணைக்கு பிறகு சார் பதி வாளர் பிரகாஷ், தற்காலிக பணியாளர் சிவசக்திவேல் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்து, இரவோடு இரவாக அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அலுவல கத்தில் கணக்கில் வராத லஞ்சப் பணம் ரூ. 20 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட ரொக் கம் பறிமுதல் செய்யப் பட்டது.