districts

img

சுத்தமல்லி பிரிவு சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம்

அரியலூர், நவ.16- அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் உள்ள டாஸ்மாக் கடை பொதுமக்கள் பயன்  படுத்தும் முக்கிய சாலை வழி யில் அமைந்துள்ளது. இத னால் போக்குவரத்து பாதிப் பும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.  இதனை தடுக்க மாவட்ட நிர்வாகமே அந்த கடையை அப்புறப்படுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலகம் அருகில் டாஸ்மாக் கடை இருப்பதால் பொதுமக்கள் வந்து செல்வதற்கும், அரு கில் பள்ளிக்கூடம் உள்ள தால் மாணவர்கள் செல்வ தற்கும் இடையூறாக உள்  ளது. எனவே இந்தக் கடை யை அகற்ற வேண்டும் என்  பது நீண்ட கால கோரிக்கை. இந்நிலையில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கம் சார்பில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. போராட்  டத்திற்கு விவசாய தொழிலா ளர் சங்க ஒன்றிய தலைவர் ஆல்பர்ட் யேசுதாஸ் தலைமை வகித்தார். மாதர் சங்க மாநி லச் செயலாளர் கீதா, மாவட்  டத் தலைவர் பத்மாவதி, மாவட்ட செயலாளர் அம்  பிகா, மாவட்ட பொருளாளர் துர்கா உள்ளிட்டோர் கண் டன உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயலா ளர் இளங்கோவன், அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்க மாவட்ட செயலா ளர் வெங்கடாசலம், சிபிஎம் மாவட்ட தலைவர் செந்தில் வேல், ஒன்றியச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ் நாடு விவசாயிகள் சங்க ஒன்  றிய செயலாளர் உத்திரா பதி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பேசி னர்.  தா.பழூர் பேருந்து நிறுத்  தத்தில் இருந்து முழக்கங் களை எழுப்பியவாறு, டாஸ்மாக் கடையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது காவல்துறை யினர் மறித்து, போராட் டத்தை கைவிடக் கோரி ஏடி எஸ்பி காமராஜ், டிஎஸ்பி சுரேஷ்குமார், டாஸ்மாக்  மேலாளர் திருமாறன் ஆகி யோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், ஒரு மாதத்திற்குள் டாஸ்மாக் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.