districts

img

கொட்டும் மழையிலும் பிளாஸ்டிக் குடிசையில் வாழும் பழங்குடி மக்கள்  

கொட்டும் மழையிலும் பிளாஸ்டிக் குடிசையில் வாழும் பழங்குடி மக்கள்,  தமிழக அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.  

அரக்கோணம் – பணப்பாக்கம் சந்தை மேட்டு பகுதியில் சுமார் 75 பழங்குடி குடும்பங்கள் பிளாஸ்டிக் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். கோவில் திருவிழாக்களில் வித்தை காட்டி யாசகம் செய்து பிழைப்பு நடத்தி வரும் இவர்கள், மழையின் காரணமாக எவ்வித வருமானமும் இல்லாததால் உண்ண உணவும் இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் மழை நீர் தேங்கியதால் இருக்க இடமில்லாமல் கைக்குழந்தையுடன் தவித்து வருவதால் தமிழக அரசு தங்களுக்கு நிரந்தர குடியிருப்புகளை கட்டிதர வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.