மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை அன்னூர் ஒன்றியக் குழுவின் 6ஆவது மாநாடு, அன்னூர், யு.ஜி மஹாலில் ஞாயிறன்று நடைபெற்றது. இம்மாநாட்டின் நினைவாக, அன்னூர் அரசு மருத்துவமனை பயன்பாட்டிற்காக, ஆம்புலன்ஸ் வாகனத்தை ஒன்றிய குழு நிர்வாகி சுகுமார் குடும்பத்தினர் ஒப்படைத்தனர். இதனை கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.மனோகரன், ஆர்.கோபால், ஒன்றியச்செயலாளர் மணிகண்டன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.