districts

img

வ.உ.சிதம்பரனார் பிறந்த தினத்தையொட்டி வாலிபர் சங்கத்தினர் ரத்த தானம்

அன்னூர்,செப்.5 - அன்னூர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஞாயிறன்று அரசு மருத்துவம னைக்கு ரத்த தானம் வழங்கினர். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனார் பிறந்த தினத்தையொட்டி ஞாயி றன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் அன்னூர் ஒன்றியக்குழு சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. அன்னூர் அரசு மருத்து வமனையில் நடைபெற்ற இம்முகாமில் சுமார் 50 நபர்கள் கலந்து கொண்டு மேட்டுப்பாளை யம் அரசு மருத்துவமனைக்கு 49 யூனிட் ரத்தம் வழங்கினர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் சரவணன், ஒன் றிய செயலாளர் அர்ஜுன், ஒன்றிய துணைத் தலைவர் ரமேஷ், ஒன்றிய பொருளாளர் பிரதீப் உட்பட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பலர்  கலந்து கொண்டனர்.