அன்னூர், பிப்.7- அன்னூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சனியன்று கிராமிய கலை இரவு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய சங்கங்க ளின் சார்பில் கோவை மாவட்டம், அன்னூர் கூத்தாண்டவர் கோவில் வீதியில் கிராமிய கலை இரவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், வல்லமை தாராயோ என்ற தலைப்பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு உரை யாற்றினார். இதைத்தொடர்ந்து மரக் காலாட்டம், கரகாட்டம், பரதம், சிலம்பாட் டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடை பெற்றன. முன்னதாக இந்நிகழ்ச்சியில் சமூகப் பணியாற்றியவர்களுக்கு பாராட்டு தெரி விக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.