districts

img

மழைநீரில் மிதிக்கும் அழிஞ்சிகுப்பம்

ஆம்பூர், நவ.11 - வேலூர் மாவட்டம் பேரணா ம்பட்டு ஒன்றியத்துக்குட்பட்ட அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் வெளியேற வழியில்லாமல் தவித்து வருகின்றனர். இந்த தகலை அறிந்த மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவ ர்கள், அந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரி களை தொடர்ந்து உரிய உதவிகளை செய்ய வேண்டும் என்றும் மழை நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாமிநாதன், பேர்ணாம்பட்டு தாலுகா செயலாளர் சரவணன், சிலம்பரசன் ராமமூர்த்தி ஆகியோர் வலியுறுத்தினர். மேலும், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சித்ராவை சந்தித்தனர். அப்போது, அவசர தேவையாக அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்கியதுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கு வதற்கான ஏற்பாடுகளும் செய்து கொடுத்தார்.  மேலும், தண்ணீரை அப்புறப்ப டுத்த நிரந்தர தீர்வாக மழைநீர் கால்வாய், தடுப்பு சுவர் கட்டித் தருவதாகவும், இந்த மழை நீரை அப்புறப்படுத்தியதும் கழிப்பறை வசதிகளும் செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். பின்னர், மாவட்ட கவுன்சிலர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் அழிஞ்சிகுப்பம் கிராம நிர்வாக அலுவலர், மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை சந்தித்து நிவாரண உதவிகளை செய்து கொடுத்தனர்.