districts

மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண் இணைக்க வேண்டும்

செங்கல்பட்டு, டிச.17- செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலகம் மூலமாக மாதாந்திர உதவித்தொகை ரூபாய் 2000 பெறும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஆதார் எண் இணைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் இதுகுறித்து தெரி வித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 பெற்று வரும் பெற்று வரும் மனவளர்ச்சி குன்றியோர், கடுமையாக பாதிக்கப்பட்ட, தொழுநோயால் பாதிக்கப்பட்ட, தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட ஆகிய திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், குடும்ப அட்டை, தொலைபேசி எண் மற்றும் யுடிஐடி அட்டை ஆகிய ஆவணங்களின் நகலை தங்கள் வட்டத்திற்கு உட்பட்ட செங்கல்பட்டு, தாம்பரம், வண்டலூர், பல்லாவரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், செய்யூர், மதுராந்தகம் சமூக பாது காப்பு திட்ட தனி வட்டாட்சியர் அல்லது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், எண்.1, ஜி.எஸ்.டி. ரோடு, மாவட்ட நீதிமன்றம் அருகில், செங்கல்பட்டு என்ற முக வரியில்  மாற்றுத்திறனாளிகள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் 27.12.2022 தேதிக்குள் அரசு அலுவலக வேலை நாட்களில் சமர்ப்பிக்குமாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.