districts

அமர் பிரசாத் ரெட்டி ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

செங்கல்பட்டு, நவ.4- சென்னை அருகே பனையூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணா மலை வீடு உள்ளது. இதன் அருகே கடந்த அக்டோபர் மாதம் சுமார்  50 அடி உயர கொடி கம்பம் நடுவ தற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரி வித்தனர்.

கடந்த மாதம் 20ஆம் தேதி நள்ளி ரவு பாஜகவினருக்கு அப்பகுதி மக்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த இடத்தில் கொடிக்கம்பம் நடக்கூடாது என காவலர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் ஏற்பட்ட மோதலில் ஜேசிபி கண்ணாடி ஆகியவற்றை பாஜகவினர் அடித்து  உடைத்தனர். இது தொடர்பாக அமர்  பிரசாத் ரெட்டி, கன்னியப்பன்(37), பாலகுமார்(35), ரமேஷ் சிவா(33), பால வினோத் குமார்(34), உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 6 பேரும் கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு  அமர் பிரசாத் ரெட்டி உட்பட 5 பேர்  ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த னர். வழக்கை விசாரித்த நீதிபதி அனைவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.