districts

img

குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்குக!

மயிலாடுதுறை,  ஜூன் 7- மயிலாடுதுறை கோட்டாட் சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அடிமனை பய னாளிகள், குத்தகை விவசா யிகள் பாதுகாப்பு சங்கத்தி னர் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக குடியி ருந்து வரும் பொதுமக்க ளுக்கு மின் இணைப்பை தராமல் அலைக்கழித்து வரும் மின் வாரியம், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி / நகராட்சி மற்றும் மின்சார வாரியத்தையும் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

அமைப்பின் மாவட்டத் தலைவர் த.இராயர் தலை மையில் நடைபெற்ற போராட் டத்தில் மாநில பொருளாளர் எஸ்.துரைராஜ், மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.விஜய்,  சிபிஎம் மாவட்டச் செயலா ளர் பி.சீனிவாசன், விவசாயி கள் சங்க மாவட்டத் தலை வர் டி.சிம்சன் மற்றும் அமைப் பின் மாவட்ட நிர்வாகிகள், விவசாயிகள் சங்கத்தினர் கண்டன உரையாற்றினர். மயிலாடுதுறை வட்டத் திற்குட்பட்ட மாயூரநாதர் நகர், மாப்படுகை நாராய ணபுரம், அவையாம்பாள் புரம், பல்லவராயன் பேட்டை, குத்தாலம், தேரிழந் தூர், சீர்காழி அகணி ஆகிய  பகுதிகளுக்கு எந்தவித தடை யுமின்றி காலம் தாழ்த்தாமல் புதிய மின் இணைப்பை வழங்க வேண்டும்.

 மாப்படுகை ஊராட்சி யில் தனிநபர் கொடுத்த கடி தத்தின் அடிப்படையில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் நாராயணபுரம் பகுதி மக்களுக்கு தற்போது வீட்டு வரி ரசீது வழங்க மறுக்கும் ஊராட்சி நிர்வாகத்தின் மீது  நடவடிக்கை எடுக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன.  

தொடர்ந்து போராட்டங் களை நடத்தி வந்தும், மாவட்ட ஆட்சியர், கோட் டாட்சியர் உத்தரவிட்டும் மின் இணைப்பு வழங்கா ததை கண்டித்து 7 மணி  நேரம் சாலை மறியல் நடந் தது. பின்பு, கோட்டாட்சியர் தலைமையில் மின்வாரிய உயர் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில், கோரிக்கைகளை நிறை வேற்றி தருவதாக உறுதி யளிக்கப்பட்டது. இதை யடுத்து மறியல் போராட்டம்  தற்காலிகமாக கைவிடப் பட்டது.

;