சாத்தூர், மார்ச் 13- விருதுநகர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் 13 ஆவது ஆண்டு பேரவைக் கூட் டம் சாத்தூரில் மிளகாய் வத்தல் வியாபாரிகள் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது. மாநாட்டில், மாவட்டத் தலை வராக வி.மகேந்திரகுமார், பொதுச்செயலாளராக பி.என். தேவா, மாவட்டப் பொருளாள ராக எஸ்.வீர சதானந்தம், மாவட்ட நிர்வாகிகளாக கே.தங்க செல்வன், முத்துப்பாண்டி, சிபி சக்கரவர்த்தி, கே.மோகன், கே.பி. முருகன், மைதீன், வைரமுத்து ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இதில் ஏராளமான ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதில், ஒன்றிய பாஜக அர சின் மக்கள் விரோத கொள்கை களை கண்டித்து மார்ச் 28, 29ஆம் தேதிகளில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத் தத்தை வெற்றி பெறச் செய்வது எனவும், ஆட்டோ தொழிலாளர் கள் முழுமையாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது என வும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.