districts

img

குமரி மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் 16 மையங்களில் மறியல்

அருமனை, டிச.2-  நாடு முழுவதும் கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று (டிச.2) நடத்திய மறியல் போராட்டம் குமரி மாவட்டத்தில் 16 மையங்களில் நடைபெற்றது. கட்டுமான தொழிலாளிக்கு உச்ச நீதிமன்ற ஆணைப்படி ஓய்வூதியத் தொகை 3000 வழங்க வேண்டும். தொழிலாளியின் பிள்ளைகளுக்கு 1ஆம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். விபத்தில் மரணமடைந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மழைக்கால நிவாரணமாக ரூ.5000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் கே.பி.பெருமாள் இராஜாக்கமங்கலத்தில் நடந்த மறியலுக்கு தலைமை வகித்தார். அருமனை வட்டார செயலாளர் புஸ்பராஜ் தலைமையில் குஞ்சாலு விளை சந்திப்பில் மறியல் நடை பெற்றது. களியல் சந்திப்பில் நடை பெற்ற மறியல் போராட்டத்திற்கு கட்டுமான தொழிலாளர் சங்க களியல் வட்டாரெ செயலாளர் சந்திரபாபு தலைமை தாங்கினார். திருவட்டார் தபால் நிலையம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு வட்டார செயலாளர் சகாய ஆன்றனி தலைமை தாங்கினார். கொல்லங்கோடு, கண்ணநாகம் சந்திப்பில் சங்க வட்டார செயலாளர் கிறிஸ்துதாஸ் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மார்த்தாண்டத்தில் வட்டாரச் செயலாளர் எப்.ஜாண் தலைமை வகித்தார்.

;