விருதுநகர், ஜூலை.21- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்குவாரிகள் மற்றும் கிராவல் குவாரிகளால் பாதிக்கப்படும் விவசாயிகள் போராட்டம் நடத்தினால் கைது செய்து சிறையில் அடைப்போம் என காவல்துறை அதிகாரிகள் மிரட்டுகின்றனர் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரி யாக புகார் தெரிவித்தனர். விருதுநகர் மாவட்ட விவசாயி கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சி யர் ஜெயசீலன் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட வருவாய் அலுவ லர் ரவிகுமார், வேளாண்மைத் துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது நடைபெற்ற விவா தம் வருமாறு : அருப்புக்கோட்டை அருகே உள்ள பன்னிக்குண்டு கண்மாயில் நீதிமன்ற உத்தரவை மீறி தனியார் கல்குவாரி வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், கண்மாயில் இருந்த மடை, கலுங்கு ஆகிய வற்றை மூடி விட்டனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.முருகன் புகார் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ஆட்சி யர், பன்னிக்குண்டு கண்மாயை ஆய்வு செய்ய குழு அமைக்கப் பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், அக்குழுவின் அறிக் கை அங்கு தாக்கல் செய்யப்பட உள்ளது என தெரிவித்தார். சிவகாசி அருகே பாறைப்பட்டி கிராமத்தில் விவசாய நிலங்களின் நடுவே உள்ள தனியார் குவா ரியை இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. ஏற்கனவே, விவசாயம் பாதிக்கும் என போராட்டத்தில் ஈடுபட்ட விவ சாயிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்து சிறையில் அடைக்கப்படு வார்கள் என சிவகாசி துணை காவல் கண்காணிப்பாளர் பகிரங்க மாக மிரட்டல் விடுக்கிறார். இது நியாயமா? என தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் அ.விஜயமுருகன் கேள்வி எழுப்பினார். தனியார் கல்குவாரியில் கிராவல் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போராட் டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்து சிறை யில் அடைக்கக் கூடாது என காவல்துறைக்கு அறிவுறுத்தப் படும் என ஆட்சியர் தெரிவித்தார். பின்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் சிபிஎம் ஒன்றிய செயலாளர் பி.பாலசுப்பிர மணியன் உள்ளிட்டோர் சிவகாசி அருகே பாறைப்பட்டியில் கிராவல் குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது என மனு அளித்தனர்
விருதுநகர் மாவட்டத்தில் காட்டுப் பன்றிகள், யானை, மான் போன்ற வன விலங்குகளால் ஏராள மான பயிர்கள் நாசமாகின்றன. இத னால் விவசாயிகள் பாதிக்கப்படு கின்றனர். இன்னும் 250 விவசாயி களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. வனத் துறையினர் அதற்கான ஏற்பாடுக ளை செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என ஏராளமான விவசாயிகள் புகார் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த ஆட்சியர், ஜூலை ,26 ஆம் தேதி வனத்துறை, வேளாண்மைத்துறை மற்றும் விவசாயிகள் கலந்து கொள்ளும் சிறப்புக் கூட்டம் நடத்தி அதில் நல்ல முடிவு எடுத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஒன்றிய அரசால் அறிவிக்கப் பட்டுள்ள விலைக்கு பருத்தி, கடலை, உளுந்து, பாசிப் பயறு போன்ற பயிர்களை மாவட்ட நிர்வா கம் கொள்முதல் செய்வதில்லை. இதனால், அடிமாட்டு விலைக்கு அப்பொருட்களை தனியார் வியா பாரிகள், இடைத் தரகர்கள் விவா யிகளிடம் வாங்கிச் செல்கின்றனர். இதனால் விவசாயிகள் பாதிக் கப்படும் நிலை உள்ளது என விவசா யிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.முருகன் தெரிவித்தார். அரசுத் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பதிலளித்தார்.