விருதுநகர், ஜன.5- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருது நகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி சாத் தூர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், இராஜ பாளையம் ஆகிய 7 சட்டமன்றத் தொகுதி களுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை ஜனவரி 5 அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சி யர் ஜெ.மேகநாத ரெட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன் னிலையில் வெளியிட்டார். அப்போது ஆட்சியர் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் ஆண் வாக்கா ளர்கள் 7 லட்சத்து 72 ஆயிரத்து 533 பேரும், பெண் வாக்காளர்கள் 8 லட்சத்து 10 ஆயி ரத்து 433 பேரும், இதர வாக்காளர்கள் 233 பேர் என மொத்தம் 15 லட்சத்து 83 ஆயிரத்து 199 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர் கள் 37ஆயிரத்து 900 பேர் அதிகமாகும். கடந்த நவம்பர் 9 முதல் டிசம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெற்ற தொடர் திருத்தத் தில் புதிதாக 25,577 வாக்காளர்கள் சேர்க் கப்பட்டுள்ளனர். இடம் பெயர்ந்த, இறந்த வாக்காளர்கள் மற்றும் இரட்டைப்பதிவுகள் என மொத்தம் 31,122 வாக்காளர்கள் நீக் கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 9 இல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலைவிட தற்போது 5545 வாக்கா ளர்கள் குறைவாக உள்ளனர் என்று தெரி வித்தார். தொகுதி வாரியான வாக்காளர்கள் விப ரம் பின்வருமாறு: இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி யில் ஆண் வாக்காளர்கள் 1,10,023, பெண் வாக்காளர்கள் 1,14,884, இதரர் 33 என மொத்தம் 2,24,940 வாக்காளர்களும், திரு வில்லிபுத்தூர் தொகுதியில் ஆண் வாக்கா ளர்கள் 1,14,274, பெண் வாக்காளர்கள் 1,20,237, இதரர் 34 பேர் என மொத்தம் 2,34,545 வாக்காளர்களும், சாத்தூர் தொகுதியில் ஆண் வாக்கா ளர்கள் 1,15,146, பெண் வாக்காளர்கள் 1,21,576, இதரர் 63 என மொத்தம் 2,36,785 வாக்காளர்களும், சிவகாசி தொகுதி யில் ஆண் வாக்காளர்கள் 1,17,829, பெண் வாக்காளர்கள் 1,23,460, இதரர் 26 என மொத் தம் 2,41,315 வாக்காளர்களும் விருதுநகர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,05,423, பெண் வாக்காளர்கள் 1,10,480, இதரர் 47 என மொத்தம் 2,15,950 வாக்காளர்களும் அருப்புக்கோட்டை தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,05,801, பெண் வாக்கா ளர்கள் 1,12,285, இதரர் 19 என மொத்தம் 2,18, 105 வாக்காளர்களும் திருச்சுழி தொகுதி யில் ஆண் வாக்காளர்கள் 1,04,037, பெண் வாக்காளர்கள் 1,07,511, இதரர் 11 என மொத் தம் 2,11,559 வாக்காளர்கள் உள்ளனர்.