மதுரை, ஆக.21- சிஐடியு மதுரை புறநகர் மாவட்டத் துணைச் செயலாளரும் தையல் தொழி லாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளரு மான பி.பொன்ராஜ்-பழனியம்மாள் அவர் களின் இளைய மகன் பி.பிரகாஷ் என்ற மருதுபாண்டி-கே.ஐஸ்வர்யா திருமணம் சோழவந்தானில் நடைபெற்றது. மணமக் கள் சிஐடியு நடத்தும் நிர்மல் பள்ளிக்கு வளர்ச்சி நிதியாக ரூ.2,000 வழங்கினர். திருமண நிகழ்வில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புற நகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்தி ரன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணே சன், மாநிலக் குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் வி.உமாமகேஸ்வரன், பி.ஜீவா னந்தம், வாடிப்பட்டி ஒன்றியச் செயலாளர் ஏ.வேல்பாண்டி, மாவட்டச் செயலாளர் கே. அரவிந்தன், தையல் தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் எம். ஐடா ஹெலன், சுமைப்பணி சம்மேளன மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடாபதி உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி னர்.