தேனி ஆர்ப்பாட்டத்தில் பெ.சண்முகம் அறிவிப்பு
தேனி, மார்ச் 23- வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலை குறைப்பில் ஈடு பட்டு வருவதால் ,மாவட்ட நிர்வா கம் முத்தரப்பு கூட்டம் நடத்தி கட்டுப்படியான விலை கிடைக்கா விட்டால் ,விவசாயிகள் இலவம் பஞ்சை விற்பனை செய்ய மாட்டார் கள் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் அறிவித்துள்ளார் . தேனி மாவட்டத்தில் இலவம் பஞ்சு ரூ. 130 வரை விற்பனை செய்து வந்த நிலையில் தற் போது வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து ரூ.53 க்கு விவசாயிகளி டம் கொள்முதல் செய்து வரு கிறார்கள் .40 கிலோ பஞ்சு உற் பத்திக்கு சுமார் ரூ.1800 வரை செலவு செய்யப்பட்டு வரும் நிலை யில் விவசாயிகளிடம் முன்பணம் கொடுத்த வியாபாரிகள் இலவம் பஞ்சை குறைந்த விலைக்கு கேட்டு விவசாயிகளிடம் வற்புறுத்தி வரு கிறார்கள் . ஒரு கிலோ பஞ்சுக்கு ரூ. 120, கொட்டை முந்திரி ஒரு கிலோ விற்கு ரூ.100 என விலை நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும். வியாபாரிகள் ,விவ சாயிகள் ,வருவாய்த் துறை , தோட்டக்கலைத் துறையினர் என முத்தரப்பு கூட்டத்தை நடத்தி விலை யை தீர்மானிக்க வேண்டும் .தங் கம்மாள்புரத்தில் உள்ள வேளாண் விலை பொருள் மார்க்கெட்டிங் சொசைட்டி மூலம் பொருளீட்டு கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தேனி ஆட்சியர் அலுவல கம் முன்பு வியாழனன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் எஸ்.கே. பாண்டியன் தலைமை வகித்தார் . நிர்வாகிகள் இ.பாண்டியன் , சி. வனராஜ் , எஸ்.எம்.முருகன் ,இ. மூக்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர் .சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .மாவட்டச் செயலாளர் டி.கண்ணன் ,மாநி லக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர் .மாவட்ட பொரு ளாளர் எஸ்.மணிகண்டன் ,துணைத் தலைவர் எம்.வி.முருகன் ,கட மலை -மயிலை ஒன்றிய செயலா ளர் ஓ.கணேசன் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட விவாசாயிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
பெ.சண்முகம் பேச்சு
விவசாயிகளின் வரலாறு காணாத தில்லி போராட்டத்தின் போது ஏற்பட்ட உடன்படிக்கை யை மோடி அரசு இதுவரை நிறை வேற்றவில்லை . விவசாயி கட னாளியாகவே வாழ்ந்து கடனாளி யாகவே மரணமடைகிறார் .விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் இடம் பெயர்தல் ,கடன் தொல்லை காரண மாக விவசாயி தற்கொலை செய்து கொள்கிறான் .தற்போது விவசாய தொழிலாளியும் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .தேனி மாவட் டத்தில் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலை வீழ்ச்சியை ஏற்படுத்தி விவசாயிகள் வயிற் றில் அடித்து வருகிறார்கள் .விவ சாயிக்கு முன்பணம் கொடுத்து மிகவும் குறைந்த விலையை தீர்மா னிக்கிறார்கள். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த போது முத்தரப்பு கூட்டம் நடத்தி விலையை தீர்மானிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கலந்து பேசி தேதி நிர்ணயம் செய்வதாக தெரிவித்தார் .எடை மோசடி ,வட்டி குறித்து புகார் தெரி விக்கப்பட்டது . அதுவரை விவசாயி கள் இலவம் பஞ்சுவை விற்பனை செய்ய மாட்டார்கள் .அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த பாது காப்பை உறுதி செய்ய வேண்டும். இலவம் பஞ்சை அரசு காதி கிராம வாரியம் மூலம் கொள்முதல் செய்வதற்கு சங்கத்தின் சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம் என்று தெரிவித்தார்.