தேனி ,டிச.14- வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், பூங்காவின் இருகரைக ளையும் இணைக்கும் பாலம் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்து வருவதால் சுற்றுலா பயணிகள் அச்ச மடைந்துள்ளனர். புதிய மேம்பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வைகை அணையில் அமைந்துள்ள பூங்காவிற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வலது கரை பூங்கா மற்றும் இடது கரை பூங்கா என பிரிக்கப்பட்டு ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன. வைகை அணை பூங்காவில் இரு கரைகளையும் இணைப்பதற்கு பாலம் அமைந்துள்ளது. ஒருபுறம் கட்டணம் செலுத்தி விட்டு சென்றால், இந்த பாலத்தின் வழியாக மற்றொரு கரை பகுதிக்கு சென்று சுற்றி பார்க்கலாம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை யின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.
இதனால் அணை யில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப் பட்டது. வெளியேற்றப்படும் தண்ணீர் இரு கரைகளையும் இணைக்கும் பாலத்தின் வழியாக செல்லும். அதிக ளவு தண்ணீர் வெளியேற்றப் பட்டதால் பாலத்தை மூழ்கி தண்ணீர் சென்றது. இதனால் சுற்றுலா பயணிகள் இந்த பாலத்தின் வழியே செல்ல தடை விதித்து, இருகரை பாலத்தி லும் முட்செடிகள் வைத்து அடைக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மறு கரையில் அமைந்துள்ள பொழுதுபோக்கு அம்சங்க ளை பார்க்க முடியாமல் தவித்து வந்தனர்.
மேலும் சுற்றுலா பயணிகள் மறு கரை பகுதிக்கு செல்ல வேண்டுமென்றால் போக்கு வரத்து சாலை வழியாக சுற்றித் தான் செல்ல வேண்டியுள்ளது. மேலும் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு அணைக்கு அதிகப்படியான நீர்வரத்து ஏற்பட்டு, அணையில் இருந்து 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் இரு கரைகளை யும் இணைக்கும் பாலம் முழுவதும் தண்ணீர் பெருக் கெடுத்து சென்றது. இதனால் பாலத்தின் தடுப்பு கம்பிகளும், தூண்களும் சேதமடைந்தது கீழே கிடக்கிறது. மேலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பாலத்தை மூழ்கி தண்ணீர் செல்வதால், பாலம் தொ டர்ந்து தண்ணீரில் மூழ்கி, பாசம் பிடித்து காணப்படுகி றது. எனவே மழை குறைந்த பின்பு மீண்டும், இந்த தரை பாலத்தில் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது ஆபத்தானது என்றும், அதற்கு மாற்றாக புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.