districts

img

சிங்கம்புணரியில் ஐந்தாவது நாளாக தொடரும் தொழிலாளர் போராட்டம்

சிவகங்கை, ஜன.31-  சிவகங்கை மாவட்டம் சிங் கம்புணரியில் உள்ள எம்.எம். போர்டிங் கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கோடு மாறு தல் செய்ததை ரத்து செய்ய வேண்டும், அப்ரண்டிஸ் மீது நட வடிக்கை எடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி 5வது நாளாக சிஐடியு பொது தொழி லாளர் சங்கம் தலைமையில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இதைத்தொடர்ந்து தொழி லாளர் நலத்துறை உதவி ஆணையர் தலைமையில் சிவ கங்கையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்ட தலைவர் வீரையா, மாவட்டச் செயலாளர் சேது ராமன், பொது தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் வேங் கையா, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முரு கேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிர்வாகத்தின் தரப்பில் பழனியப்பன், பழனி யாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்படாததால் செவ்வாயன்று (பிப்ரவரி 1) தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவானது.  போராட்டத்தில் தொழிலா ளர்கள் ராஜா, விஷ்ணு, மூக் கையா, பொன்ராஜ், இளந்திரை யன், முருகன், சிபிஎம் தாலுகா செயலாளர் காந்திமதி, மாவட்டக் குழு உறுப்பினர் சாந்தி, மாவட்ட தலைவர் வீரய்யா, மாவட்டச் செயலாளர் சேதுராமன் உள் ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.