விருதுநகர், அக்.3- விருதுநகர் மாவட்டம் சேத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் உட்பட அனைத்துக் கட்சியினர் திங்களன்று காத் திருப்புப் போராட்டம் நடத்தி னர். சேத்தூரில் பிரதான சாலையில் உள்ள இந்த மதுக்கடையால் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வந்தது. கடையை அகற்ற வலி யுறுத்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடந்த ஜூலை 14-ஆம் தேதி போராட்டம் நடத் தியது. அப்போது பேச்சு வார்த்தைக்கு வந்திருந்த வருவாய்த்துறையினர் கால அவகாசம் கேட்டதன் அடிப்படையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. வாக்குறுதி நிறைவேற்றப் படாததால் மீண்டும் ஆக.22- ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மீண்டும் போராட்டம் நடைபெற்றது. அப்போதும் அவகாசம் கேட்கப்பட்டது.
இரண்டா வது முறையாக வாக்குறுதி நிறைவேறாததால் செப்.1-ஆம் தேதி அணைத்துக் கட்சி கள் சார்பில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது மீண்டும் அரசு நிர்வாகம் தலையிட்டு அவகாசம் கேட்டதன் அடிப் படையில் அவகாசம் வழங் கப்பட்டது. மூன்றாவது முறையும் வாக்குறுதியை நிறைவேற்ற மாவட்ட நிர்வா கம் முயற்சிக்கவில்லை. இதையடுத்து திங்க ளன்று அனைத்துக்கட்சிகள் சார்பில் காத்திருப்புப் போரா ட்டம் நடைபெற்றது.மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரக் குழு உறுப்பினர் குருநாதன், சிபிஐ நகர் செய லாளர் ராஜா, காங். நகர் தலைவர் நச்சாடலிங்கம் உள்ளிட்ட 13 கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. காத்திருப்புப் போராட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ. குருசாமி மாவட்டக் குழு உறுப்பினர் ராமர், இராஜ பாளையம் மேற்கு ஒன்றியச் செயலாளர் சந்தனகுமார், இராஜபாளையம் நகர் செயலாளர் மாரியப்பன், தங்கவேல் உட்பட ஏராள மானோர் கலந்துகொண்ட னர். இந்த நிலையில் இராஜ பாளையம் வட்டாட்சியர் சீனி வாசன் தலைமையில் சேத் தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நான்கா வது முறையாக பேச்சு வார்த்தை நடைபெற்றது. அக். 16-ஆம் தேதிக்குள் டா1 மாக் கடையை இடமாற்றம் செய்வது தொடர்பாக அர சின் இறுதி முடிவு தெரி விக்கப்படும் எனத் தெரி வித்தார். இதையடுத்து காத் திருப்புப் போராட்டம் விலக் கிக்கொள்ளப்பட்டது.