districts

img

26ஆவது நாளாக கரும்பு விவசாயிகள் போராட்டம்

மதுரை, ஜன.8- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவையை துவங்கிட கோரி டிசம்பர் 14 அன்று கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி தலைமையில் துவங்கிய காத்திருக்கும் போராட்டம் 26வது நாளாக சனிக்கிழமையன்று தொடர்ந்து நடைபெற்றது.  போராட்டத்தில், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கரு.கதிரேசன், அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர் என்.ஸ்டாலின்குமார், கரும்பு விவசாயி சங்க நிர்வாகிகள் பி.போஸ், ராம்ராஜ், சுப்பரமணி, பெருமாள், எஸ்.முருகன், கிருஷ்ணமூர்த்தி, கார்த்திக் ஆகியோர் உட்பட பெரிய ஊர்சேரி கிராம பெண்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.