மதுரை, டிச.16- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டுக்கான அரவை உடனே துவங்கிட கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலை வர் என்.பழனிச்சாமி தலைமையில் செவ் வாயன்று துவங்கிய காத்திருக்கும் போராட்டம் 3 ஆவது நாளாக வியாழ னன்று தொடர்ந்து நடைபெற்றது. போராட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கரு.கதிரே சன், அலங்காநல்லூர் செயலாளர் என். ஸ்டாலின்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங் கோவன், மாவட்டப் பொருளாளர் வி. அடக்கிவீரணன், மாவட்டத் துணைச் செயலாளர் கே.முருகேசன், கிழக்கு ஒன்றி யச் செயலாளர் கே.சேகர், பொருளாளர் பொன்னையா, கரும்பு விவசாயி சங்க நிர்வாகிகள் பி.போஸ், ஆர்.ராம்ராஜ், அய்யம்பட்டி பன்னீர்செல்வம், கல்லம் பட்டி முருகன் உட்பட விவசாயிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.