மதுரை, ஜூலை 8- மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி அரசுக் கல்லூரியாகும் என்ற அறிவிப்பை விரைவாக அமல்படுத்த வேண்டுமென மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் தமிழக அர சுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தனியார்மயமாக்கல், உலகமய மாக்கல் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட 90-ஆம் ஆண்டுகளில் புதிய அரசு கல்லூரிகளோ, அரசு உதவி பெறும் கல்லூரிகளோ தொடங்குவதில்லை எனவும் அரசு நிதி உதவி பெறும் பாடப்பிரிவுகளை தொடங்குவதில்லை என ஒன்றிய அரசு முடிவெடுத்தது. இந்த நிலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவில் இடம்பெற்றிருந்த தொழிற்சங்கத் தலைவர்களின் வலியுறுத்தலின் பேரில் அரசுத்துறை சார்பில் மதுரை மாநக ரில் இருபாலர் பயிலும் கல்லூரி இல் லாத குறையைப் போக்குவதற்கும், மதுரை காமராஜர் பல்கலைக்கழ கத்தின் 25-ஆம் ஆண்டைக் கொண்டா டும் வகையிலும் மதுரையில் கல்லூரி துவக்க 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதையடுத்து மதுரை தல்லா குளத்தில் 1967-ஆம் ஆண்டு தொடங் கப்பட்ட மாலைநேரக் கல்லூரியை 1994-ஆம் ஆண்டு முதல் முழு நேரக் கல்லூரியாகத் தரம் உயர்த்தி “மதுரை காமராசர் பல்கலைக் கழகக் கல்லூரி” உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பல்கலைக்கழகம் சார்பில் தொடங்கப்பட்ட முதல் கல்லூரி யாகும் இது. இதற்கு பல்கலைக் கழக மானியக்குழு அங்கீகாரம் வழங்கி யுள்ளது. இக்கல்லூரியில் 1,500 மாணவி கள் உட்பட 4,250 மாணவர்கள் பயில் கின்றனர். மாணவர் சேர்க்கை விகி தத்தை உயர்த்த வேண்டும் என்ற அர சின் முடிவை அமல்படுத்த இக்கல்லூரி உறுதுணையாக உள்ளது. இங்கு படிப்பவர்களில் பெரும்பாலோர் மிக வும் பின்தங்கிய, பட்டியலின சமூகம், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த கிரா மப்புறத்து மாணவ மாணவிகள். தமிழக அரசு பின்பற்றும் சமூக நீதிக் கோட்பாடு இக்கல்லூரியில் அமல் படுத்தப்படுகிறது. தமிழக அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கல்லூரியில் பணியாற்றும் பெரும் பாலான ஆசிரியர்கள் மற்றும் அலுவ லர்கள் பல ஆண்டுகளாக தொகுப் பூதிய, மதிப்பூதிய அடிப்படையில் பணி யாற்றுகின்றனர். இந்தக் கல்லூரியை நிர்வகிக்கும் காமராஜர் பல்கலைக்கழ கம் எந்த நிதியையும் இதுவரை வழங்க வில்லை.
அதிக கட்டணம் செலுத்தும் மாணவர்கள்
மேலும் கல்லூரிக்கு ஊதிய மானி யத்தை அரசு வழங்காததால் மாண வர்களிடம் கல்விக்கட்டணம் மூலம் நிதி வசூலிக்கப்பட்டு ஆசிரியர், அலுவ லர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வரு கிறது. இதனால் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பொருளாதார நிலையைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் கட்ட ணம் செலுத்த வேண்டியுள்ளது. இக்கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்ற வேண்டுமென வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி சட்டமன்றத் தில் பேசினார். அப்போது உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி விரை வில் இந்தக் கல்லூரி அரசுக் கல்லூரி யாக மாற்றப்படும் என அறிவித்தார். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழ கங்களின் உறுப்புக் கல்லூரிகள் அனைத்தும் அரசுக் கல்லூரிகளாக மாற் றப்பட்டுவிட்ட நிலையில் இக்கல்லூரி மட்டும் இன்னும் அரசுக் கல்லூரியாக மாற்றப்படாத நிலை உள்ளது. இந்த நிலையில் இக்கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள்-அலுவ லர்கள் மதுரை காமராஜர் பல்கலைக் கழகக் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் அல்லது இக்கல்லூரிக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் இக்கல்லூரியில் பணியாற்றும் பேராசி ரியர்கள், உதவி ஆசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், அலுவலர்கள், நிர்வாகப் பணியாளர்கள் அனைவ ருக்கும் பணிப் பாதுகாப்பு வழங்க வேண் டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.