districts

img

காமராசர் கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்றக்கோரி மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மதுரை, அக்.14-  மதுரை தல்லாகுளம் அருகே உள்ள காமராசர் பல்கலைக்கழக கல்லூரி யை அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும். கல்லூரி யில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஆண்டுதோறும் உயர்த் தப்படும் கல்லூரிக் கட்ட ணத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி  வெள்ளி யன்று இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநகர் மாவட்ட தலைவர் டேவிட் தலைமை வகித்தார்.  மாவட்டச் செய லாளர் க. பாலமுருகன் பேசி னார். மாவட்ட துணைச் செயலாளர் சுபாஷ், மாவட்ட துணைத்தலைவர் சக்தி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ராஜா, கல்லூரி மாண வர்கள் கலந்துகொண்டனர்.