சிவகங்கை,மே 20- 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்ட அளவில் மானா மதுரை அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி மாணவி இலக்கியா 593 மதிப்பெண் களுடன் முதன்மை பெற் றுள்ளார். மானாமதுரை நியூ வசந்த நகரில் உள்ள அவரது வீட் டில் மாணவி இலக்கியா வை நேரில் சந்தித்து கூட்டு றவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ரூ. 25 ஆயி ரம் நிதி உதவி அளித்து, பாராட்டினார். மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கை மாறன், நகர் செய லாளர் பொன்னுச்சாமி, ஒன் றிய செயலாளர் ராஜாமணி, ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் முத்துச் சாமி மற்றும் பலர் வாழ்த்தி னர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட பொரு ளாளர் பாலமுருகன், மானா மதுரை நிர்வாகிகள் தேவ தாஸ், ரசீந்திரகுமார் ஆகியோ ரும் மாணவி இலக்கியாவை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.