districts

img

போதைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக கையெழுத்து இயக்கம்

போதைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக  நிலக்கோட்டையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு ஒன்றிய தலைவர் பிடல்காஸ்ட்ரோ தலைமை வகித்தார் .சிஐடியு துணை தலைவர் சாதிக்அலி, நிலக்கோட்டை காவல் சார்புஆய்வாளர்கள் ரவி மயில்சாமி, அண்ணாதுரை ஆகியோர் கையெழுத்திட்டு துவக்கி வைத்தனர். பெண்கள்,பள்ளி,கல்லூரி மாணவர்கள் கையெழுத்திட்டனர். மாவட்ட செயலாளர் கே. ஆர். பாலாஜி மாவட்ட பொருளாளர்  ஜி. சேதுசிவன் நிர்வாகிகள் கார்த்திக், சுஜித்,விஷ்ணு, சிவா, ராமராஜன், முத்துராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.