சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத் துறை அதி காரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜி யை கைதுசெய்தனர். நீதிமன்றக் காவல் முடிவடைந்த தால் ஆகஸ்ட் 29 அன்று சிறப்பு நீதி மன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத் தப்பட்டார். இதையடுத்து வழக்கை விசா ரித்த சிறப்பு நீதிமன்றம், செந்தில் பாலாஜி யின் நீதிமன்ற காவலை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட் டது. மேலும், சிறப்பு நீதிமன்றத்தில், ஜாமீன் கோர முடியாது என்றும், ஜாமீன் தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடவும் உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவசர வழக் காக விசாரணைக்கு எடுக்கக்கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீடு செய் தார். இதனை கவனத்தில் கொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.