districts

img

காந்திகிராமம் பல்கலை., முன்பு மேம்பாலம் அமைத்துத் தருக!

சின்னாளப்பட்டி,செப்.11- திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழ கத்திற்கு திண்டுக்கல் நாடாளு மன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் செப்டம்பர் 10 அன்று வருகை தந்தார்.. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பஞ்சநாதம் ஆர். சச்சிதானந்தம் எம்.பி.யை   வரவேற்று நினைவுப்பரிசு வழங்கினார் .பின்னர் பல்கலைக்கழகம்  குறித்தும் பல்கலைக்கழக வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்தும் ஆர். சச்சிதானந்தம் எம்.பி., கேட்டறிந்தார். பல்கலைக்கழகத்தின் முக்கிய கோரிக்கையான பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைத்துத் தருவது , பல்க லைக்கழகத்தை மத்திய பல்கலைக் கழக மாக  கொண்டு வருவது மற்றும் காந்திகிரா மம் பல்கலைக்கழகத்தில் இருந்து கேந்திர  வித்யாலயா பள்ளிக்கு சாலையை சீர மைத்துத் தருவது என கோரிக்கை முன் வைக்கப்பட்டது. பின்னர் கேந்திர வித்யாலயா பள்ளிக்கு  சென்று ஆய்வு மேற்கொண்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகேஸ்வரனிடம் கேட்டறிந்தார்.  அப்போது ‘பள்ளிக்கு  கலையரங்கம் ஒன்றை கட்டித் தர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.  மேம்பாலம் கட்டுவது தொடர்பாக ஆர். சச்சிதானந்தம் எம்.பி., அலைபேசியில் தேசிய நெடுஞ்சாலையின் திட்ட இயக்கு னரை தொடர்பு கொண்டு உடனடியாக நட வடிக்கை எடுக்க வலியுறுத்தினார். மேலும்  மாவட்ட ஆட்சியரிடம் கலந்து கொண்டு உட னடியாக கேந்திர வித்யாலயா பள்ளிக்கு கலையரங்கம் கட்டிக்கொடுப்பதற்கான நட வடிக்கை எடுப்பது குறித்து உறுதிப்படுத்தி னார்.