districts

img

இந்தியாவிலே இல்லாத வகையில் மாபெரும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தியுள்ளோம்! - சு.வெங்கடேசன் எம்.பி., பேட்டி

மதுரை, ஜூலை 19-  மதுரை நாடாளுமன்ற தொகுதி யின் அனைத்து ஊராட்சிகள் மற்றும்  மாநகராட்சி வட்டங்களில் நடை பெற்ற மாபெரும் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் பெறப்பட்ட மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் தொகுத்து வழங்  கும் நிகழ்வு ஜூலை 19 புதனன்று நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா வை மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் ஆட்சியர கத்தில் நேரில் சந்தித்து இந்த மனு வை வழங்கினார். மாநகராட்சி ஆணை யாளர் கே.ஜே.பிரவிண்குமார், கூடுதல் ஆட்சியர் சரவணன், மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன், மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர்  மாவட்டச் செயலாளர் மா.கணேசன், புற நகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பி னர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா ஆகியோர் உடனிருந்தனர்.  இதன்பின்னர் நடைபெற்ற செய்தி யாளர்கள் சந்திப்பில் சு.வெங்கடேசன் எம்.பி.,கூறியதாவது: மதுரை நாடாளுமன்ற தொகு திக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் சந்  திப்பு இயக்கத்தை நடத்தி முடித்தி ருக்கிறோம்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம்  30 ஆம் தேதி மேலூர் சட்டமன்றத் தொகு தியில் கொட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தும்மைப்பட்டியில் தியாகச் சீலர் கக்கன் ஐயா சிலைக்கு மாலை யணிவித்து மக்கள் சந்திப்பு இயக் கத்தை துவக்கினோம். இந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி இயக்கத்தை முடித்திருக்கிறோம். நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 124 கிராம ஊராட்சி கள், மதுரை மாநகராட்சி, மேலூர் நக ராட்சி, அ.வல்லாளபட்டி, பரவை பேரூ ராட்சிகள் என தொகுதி முழுவதும் அனைத்து ஊராட்சி அமைப்புகளிலும் 12 மாதங்களில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம். இந்த இயக்கம் ஒரு மாபெரும் அனுபவத்தை எங்க ளுக்கு வழங்கியிருக்கிறது. வெறுமனே  மனுக்களை பெறுகிற இயக்கமாக அல்  லாமல், 30-க்கும் மேற்பட்ட துறைகளின் அதிகாரிகளை உடன் அழைத்துக் கொண்டுபோய் அந்தந்த இடங்களில் பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டோம். மேலும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண அரசு துறைகளை பயன்படுத்தி னோம். 

ஆகஸ்ட்டில் துறைவாரி ஆய்வுக்கூட்டம்

இந்த 12 மாதங்களில் ஒரு லட்சம் மக்களை சந்தித்திருக்கிறோம். 10 ஆயி ரம் மனுக்களை பெற்றிருக்கிறோம். 5200 மனுக்கள் எங்களிடம் நேரடியாக வந்தன. அந்த மனுக்களை எங்களின் கூடுதலான கடிதத்துடன் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பியிருக்கிறோம். இப்போது மாவட்ட ஆட்சியரிடம் எந்  தெந்த துறைக்கு எத்தனை மனுக்கள்  அனுப்பியிருக்கிறோம். எந்தெந்த பகுதியிலிருந்து அனுப்பியிருக்கிறோம் என்ற விபரத்தை அளித்துள்ளோம். 4  ஆயிரம் மனுக்களை அந்தந்த துறை  அதிகாரிகளிடம் நேரடியாக வழங்கி யிருக்கிறோம். தமிழகத்திலே ,இந்தியா விலே இதுவரை இல்லாத வகையில்  எந்த மக்கள் பிரதிநிதியும் நடத்தியிராத விரிவான மக்கள் சந்திப்பு இயக்கத்தை  மதுரையில் நடத்தியுள்ளோம். இதில்  முகாம் நடைபெறும் இடத்திலே 100-க்கும் மேற்பட்ட பட்டாக்களை வழங்கி யுள்ளோம். குறிப்பாக மேலூர் நகராட்சி யில் நடத்தப்பட்ட முகாம்களில் 102  பட்டாக்களை வழங்கியுள்ளோம்.  

இந்த மக்கள் சந்திப்பு இயக்கத்தில்  ஒட்டுமொத்தமாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாக்களை வழங்கி யிருக்கிறோம். ஆயிரத்திற்கும் அதிக மானோருக்கு உதவித்தொகைகளை பெற்றுக் கொடுத்திருக்கிறோம். பல  பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டுள்  ளோம். அளிக்கப்பட்டுள்ள மனுக் களுக்கு தொடர்ச்சியாக தீர்வுகாண்ப தற்காகத்தான் இப்போது மாவட்ட ஆட்சியரை நாங்கள் சந்தித்து, ஒரு  தொகுப்பு மனுவை கொடுத்து கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.மக்கள் சந்திப்பு இயக்கத்தில் நாங்கள் பெற்ற மனுக்கள் உரிய அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்  கப்பட்டிருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்கு, துறைவாரியான ஆய்வுக்  கூட்டத்தை ஆகஸ்ட் மாதம் இரண்டா வது வாரத்தில் துவக்க வேண்டும் என்று  கோரியிருக்கிறோம். இதை முக்கிய மான கோரிக்கையாக ஆட்சியரிடம் முன்வைத்துள்ளோம். அந்த ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறபோது இந்த மனுக்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். 

நூறுநாள் திட்டத்தில்  82 ஆயிரம் பேருக்கு  வேலை அளிப்பு

இந்த மக்கள் சந்திப்பு இயக்கத் தால் நூறு நாள் வேலைவாய்ப்பு உறு தித்திட்டத்தில் நல்ல முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால், கடந்த ஆண்டு நூறு நாள் வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் ஒரு நாளுக்கு 32 ஆயிரம் பேருக்கு வேலைகொடுக்கப்பட்டது. கிராமப்புற வேலையை அதிகரிக்க வேண்டும் என்று இந்த இயக்கத்தின் மூலம் வலியுறுத்தியதன் விளைவாக இன்றைய தினம் மதுரை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 82 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படுகிறது.இது ஒரு  மிகப்பெரிய முன்னேற்றம்.கொட்  டாம்பட்டியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை  வந்தது.இதனை முதலமைச்சர் கவ னத்திற்கு கொண்டுசென்று, அப்பகுதி யில் ரூ.5 கோடி மதிப்பில் பேருந்து நிலை யம் அமையவிருக்கிறது. மேலூர் கொட்டாம்பட்டி மிகவும் பின்தங்கிய பகுதி. அந்த பகுதியில் குடிநீர் இணைப்  புக்கான கோரிக்கை வந்தது. அந்த  மக்களின் நியாயமான கோரிக்கையை  தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு  சென்றோம். அதன்விளைவாக இன் றைக்கு ரூ.112 கோடி மதிப்பில் விரி வாக்கப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. 

கொரோனாவால் நிறுத்தப்பட்ட  பேருந்துகளை இயக்கிடுக!

மாவட்ட நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டிய இரண்டு விஷயங்களை கவ னத்திற்கு கொண்டு வந்துள்ளேன். ஒன்று, கொரோனா காலத்திற்கு முன்பு மாவட்ட கிராமப்பகுதிகளில் இயக்கப்பட்ட பேருந்துகள், கொரோ னாவை காரணமாகச் சொல்லி நிறுத் தப்பட்டன. அப்படி நிறுத்தப்பட்ட அனைத்துப் பேருந்துகளையும் மீண்டும் இயக்கப்பட வேண்டும். சில  பள்ளிகளுக்கு வணிகரீதியான மின் கட்டணம் விதிக்கப்படுகிறது. இது பள்ளிகளுக்கு பல சிரமங்களை கொடுக்  கின்றன. பள்ளிகளுக்கு எப்படி வணிக ரீதியான கட்டணம் வசூலிக்க முடியும்?  எனவே இதில் தலையிட்டு, உள்ளூர்  வகை மின்கட்டணமாக மாற்ற வேண்டும். இந்த இரண்டு பிரச்சனை களில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுத்து தீர்வுகாண வேண்டும்.

மாநில அரசுக்கு  சில கோரிக்கைகள்

மாநில அரசுக்கும் முதலமைச்சரின் கவனத்திற்கும் சில கோரிக்கைகளை கொண்டுசெல்லவிருக்கிறோம். சமீபத்  தில், மாநில எல்லையை உருவாக்கு வதற்காக போராடிய போராளிகளுக்கு மதிப்பூதியம் ஆயிரம் ரூபாய் உயர்த்  தப்பட்டது. ஆனால் மொழிப் போராட்ட தியாகிகளுக்கு மதிப்பூதியம் உயர்த்தப்படவில்லை. எனவே மதிப்பூ தியத்தை உயர்த்தித்தர வேண்டும் என்று மொழிப்போர் தியாகிகள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் நியாயமான கோரிக்கையை முதல மைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல விருக்கிறோம். மொழிப்போர் தியாகிகளுக்கு மதிப்பூதியத்தை நிச்ச யமாக உயர்த்தித்தர வேண்டும் என்று  கேட்டுக் கொள்கிறோம். கிராமப்பகு தியில் எலக்ட்ரானிக் பட்டா என்ற இ-பட்டா நடைமுறையில் உள்ளது. நகர்ப்புறங்களில் இன்னும் அது நடை முறைக்கு வரவில்லை. காரணம் கேட்  டால், சர்வர் பிரச்சனையாக உள்ளது  என்று சொல்லிக் கொண்டிருக்கி றார்கள். நகர்ப்புறங்களில் பட்டா வழங்குவதில் மிகப்பெரும் தேக்கம் உள்ளது. எனவே நகர்ப்புறங்களில் இ-பட்டா வழங்க சர்வர் பிரச்சனையை சரிசெய்ய வேண்டும் என்று அரசை கேட்டுக் கொள்கிறேன். ஆதரவற்ற விதவைகளுக்காக சான்றிதழ் கொடுக்கப்படுவதில் கடு மையான நிபந்தனைகள் உள்ளன. அது பொருத்தப்பாடு இல்லாமல் உள்ளது. அந்த நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆதரவற்ற விதவைகள் அவர்களது அம்மாவுடன் இருக்கலாம். மாமியாருடன் இருக்க லாம். யாராவது ஒருத்தர் வீட்டில்தான் இருக்க முடியும். ஆனால் யாருடனும்  இருக்கக் கூடாது என்று விதி உள்ளது.  அப்படியென்றால் அவர்கள் தன்னந் தனியாகவா நிற்க முடியும்? எனவே பொருத்தமில்லாத இத்தகைய விதி களை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

விவாகரத்து பெற்ற பெண்களுக்கு உதவ தனித் திட்டம் கொண்டு வருக!

விவாகரத்து பெற்ற பெண்களுக்கு  எந்த தனி சலுகையோ, திட்டமோ  இல்லை. கணவனால் கைவிடப்பட்டோ ருக்கு திட்டம் உள்ளது, தனித்து வாழும்  பெண்களுக்கு ஒரு திட்டம் உள்ளது,  முதிர்க்கன்னிகளுக்கென்று ஒரு திட்டம்  உள்ளது. ஆனால் விவாகரத்து வாங்  கிய பெண்கள் எந்த பட்டியலுக்குள்ளும் வரவில்லை. குடும்பப் பிரச்சனை களால் இளம்பெண்கள் விவாகரத்து பெற்றுள்ளனர். எனவே அவர்களுக் கான திட்டத்தை அரசு அறிவித்து, தனிச்சலுகையும் உதவியும் வழங்க வேண்டும்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் எனும் வரப்பிரசாதம் 

நாங்கள் வாங்கிய 10ஆயிரம் மனுக்  களில் 6 ஆயிரம் மனுக்கள் தீர்வு காணப்பட உள்ளது என்று மகிழ்வோடு  சொல்ல முடியும்.அரசு கொண்டுவந் துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் 6 ஆயிரம் மனுக்கள் நிவர்த்தி செய்யப்படும். இந்த திட்டம் மாவட்டத்திற்கு ஒரு  வரப்பிரசாதமாக இருக்கும். நாங்கள்  தொகுத்து வழங்கியுள்ள மனுக்கள்  மீது மாநில அரசும் மாவட்ட நிர்வாக மும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்கள் மிகப்பெரும் நம்பிக்கையுடன் மனுக்களை வழங்கி யுள்ளனர்.மிகப்பெரும் அளவில் வெற்றிகரமாக மக்கள் சந்திப்பு  இயக்கத்தை நடத்தி முடித்திருக்கி றோம்.அதனுடைய கடமைகளை தொடர்ந்து மக்களுக்காக நிறைவேற்று வோம் என்று தெரிவித்துக்கொள்கி றேன். இவ்வாறு அவர் பேசினார்.

‘இந்தியா’வைக் கண்டு மோடி  அலறுவதை ரசிக்கிறோம்

செய்தியாளரின் ஒருவ ரின் கேள்விக்கு சு. வெங்கடேசன் எம்.பி.,பதிலளிக்கை யில், எதிர்க்கட்சிகள் உருவாக்கியுள்ள இந்தியா என்ற கூட்டணி குறித்து பிர தமர் மோடிக்கு ஏற்பட்டுள்ள பயத்தை  நான் ரசிக்கிறேன். இந்தியா என்ற  அமைப்பின் எதிரி மோடி. இந்தியா வின் எதிரிகள் பாஜகவினர்.இந்திய ஒற்றுமையின் எதிரி மோடி. இந்திய பன்மைத்துவத்தின் எதிரி பாஜக.இந்திய மதச்சார்பின்மையின் எதிரி  இந்துத்துவா, இந்தியாவை கண்டு மோடி அலறுவதை, பயப்படுவதை நாங்கள் ரசிக்கிறோம். அதானி என்ற  ஒரு வார்த்தையை நாடாளுமன்றத் தில் கூறிவிட்டு,ஊழல் குறித்து பிரத மர் மோடி பேசட்டும் பார்க்கலாம்.இந்தி யாவே நடுங்கக்கூடிய பங்குச்சந்தை ஊழலுக்கு காரணமான அதானி குறித்து நாடாளுமன்றத்தில் ஒற்றை வார்த்தை பேசாதவர் பிரதமர் மோடி. ஆக்டோபஸாக இந்தியாவை விழுங்கக் கூடிய அதானி ஊழல் குறித்து மோடி பேச மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
 

 

 

 

;