districts

தாமிரபரணி வெள்ளத்தால் உறைக்கிணறுகள் பாதிப்பு:

திருநெல்வேலி, டிச.4- நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உறை கிணறுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நெல்லையில் தொடர் மழையால் தாமிர பரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போதும் நீரோட்டம் அதிக மாகவே உள்ளது. தாமிரபரணி ஆற்றுக் குள் நெல்லை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பல்வேறு இடங்களில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அங்கிருந்து தண்ணீர் எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஏற்றி பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. வெள்ளப் பெருக்கால் கொண்டா நகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உறை  கிணறுகளில் மணல் புகுந்து நீர் உறிஞ்சும் மோட்டார்களை மூழ்கடித்து உள்ளது. மின் இணைப்பு வயர்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளது. மின் மோட்டார் பழுது ஏற்பட்டதாலும் உறை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க முடியவில்லை.  இதனால் அங்கிருந்து குடிநீர் விநியோ கம் பெறும் பகுதிகளில் குடிநீர் கிடைக்கா மல் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அவ திப்பட்டு வருகின்றனர். நெல்லை மாநகரில்  தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, கொக்கிர குளம், மேலப்பாளையம், குலவணிகர் புரம், வீரமாணிக்கபுரம், பாளையங் கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.  

வீட்டு இணைப்புகளில் தண்ணீர் வராத நிலையில் பிரதான குழாய்கள் அமைந்துள்ள மேலநத்தம், கருங்குளம் பகுதிகளில் குழாய்களில் வடியும் கசிவு நீரை பொதுமக்கள் இரு சக்கர வாக னத்தில் வந்து குடங்களில், கேன்களில் பிடித்து செல்கிறார்கள். இந்த பிரச்ச னையை தீர்க்க மாநகராட்சி அதிகாரிகள் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்கி றார்கள். ஆனால் அந்த தண்ணீர் போது மானதாக இல்லை என்று பொதுமக்கள் கூறுகிறார்கள். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘தொடர் மழையால் நீரேற்று  நிலையங்களில் மோட்டார்கள் பழுதாகி உள்ளன. தற்போது வெள்ளம் குறைந்துள் ளது. எனவே மோட்டார்களை சரி செய்து விரைவில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.