சின்னாளப்பட்டி, டிச.12- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் வளங் குன்றா சுற்றுச்சூழல்- கல்விக்கான அமைப்பு மற்றும் அச்சாணி தன்னார்வலர் அமைப்பின் சார்பில் காசநோய் தொற்றாளர்களுக்கு ஊட்டச்சத்து நல உதவிகள் வழங்கப் பட்டன. நிகழ்வில், ஆத்தூர் அரசு மருத்து வமனை நம்பிக்கை மைய ஆற்றுநர் ம.கண்ணன் வரவேற்றார். முதன்மை மருத்துவ அலுவலர் மரு.லியோன் வினோத்குமார் முன்னிலை வகித் தார். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி துணை இயக்குநர் (காச நோய்) மரு. ராமசந்திரன் தலைமை வகித்து, காசநோய் தொற்றாளர் களுக்கான ஊட்டச்சத்து விழிப்பு ணர்வு உரையாற்றினார். இதனை தொடர்ந்து பயனாளி களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை ‘சி’ அறக்கட்டளை ஒருங்கிணைப்பா ளர் அழகர்சாமி, அச்சாணி அமைப் பின் ஒருங்கிணைப்பாளர்கள் ராமு, கருப்பையா, துணை இயக்குநர், மருத்துவ அலுவலர் ஆகியோர் வழங்கினர். காசநோய் பிரிவு சுகாதார பணியாளர் மரிய மெரினா நன்றி கூறினார்.